.

Pages

Tuesday, July 26, 2016

3500 அடி மலை உச்சியின் பாறை சரிவில் காரை நிறுத்திய சவூதி இளைஞர் !

பொதுவாக சவூதி விமான பைலட்டுகள் உலகிலேயே துணிச்சல் மிக்க விமானிகளாக அறியப்படுகின்றனர். அதுபோல் பல சவூதி இளைஞர்களும் தங்களுடைய வாகனங்களை கொண்டு பல அசட்டுத் துணிச்சல் சாகசங்களில் ஈடுபடக் கூடியவர்' என்பது பரவலாக அறியப்பட்டதே. இப்படி சாகசம், துணிச்சல் என்ற பெயரில் உயிரோடு விளையாடும் இளைஞர்கள் பிடிபட்டால் ஜெயில் தண்டனை அல்லது கட்டாய ராணுவ சேவையில் தள்ளப்படுவார்கள்.

அதிலும் இன்றைய காலம் நயாப் பைசாவுக்கும் புண்ணியமில்லாத 'சோஷியல் மீடியா லைக்குகளுக்கு' அலையும் காலமிது. அதன் படி சவூதி இளைஞர் ஒருவர் 3500 அடி உயர ஒருவர் ஃபிபா மலையுச்சியின் சரிவான பாறையில் கொண்டு போய் தன்னுடைய காரை நிறுத்தி புகைப்படம் எடுத்து சோஷியல மீடியாக்களில் வெளியிட, அவர் எதிர்பார்த்த லைக்குகளும் ஷேர்களுமாக அந்தப்படம் பகிரப்பட்டு வருகிறது.

நீங்களும் இந்த படத்தை பார்த்து உங்களின் குதிகால்கள் ஜில்லிட்டால்... என் இனமய்யா நீ.

Source: Khaleej Times
தமிழில்: நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.