அதிராம்பட்டினம், ஜூலை 21
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் தொடர் மொபைல் போன் திருட்டால் பொதுமக்கள் கவலையடைந்துள்ளனர்.
அதிராம்பட்டினம், ஏஜே நகர் பகுதியில் வசிப்பவர் அப்துல் சலாம் ( வயது 33 ). பாட்டல் குடிநீர் விநியோகம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இவர் நேற்று இரவு தனது வீட்டில் உறங்கிக்கொண்டிருக்கும் போது நள்ளிரவில் மர்ம நபர் வீட்டின் பின்புறத்தில் நுழைந்து இவரது மொபைல் போனை திருடிச் சென்றுள்ளான். மொபைல் போன் மதிப்பு ரூ 6 ஆயிரம் என கூறப்படுகிறது.
அதே போல் கடந்த 15 தினங்களுக்கு முன்பு மற்றொரு திருட்டு சம்பவம் நடந்துள்ளது. இதே பகுதியில் குடியிருப்பவர் பாலு ( வயது 64 ) அதிராம்பட்டினத்தில் உணவகம் நடத்தி வருகிறார். நள்ளிரவில் இவரது வீட்டினுள் திருடன் புகுந்து ரூ 20 ஆயிரம் மதிப்புள்ள மொபைல் போன், ரூ 10 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரி லைட் ஆகியவற்றை திருடிச்சென்றுவிட்டதாக அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சமீபகாலமாக அதிராம்பட்டினம் குடியிருப்பு பகுதியில் நள்ளிரவில் தொடர் மொபைல் போன் திருட்டு போவது அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக உள்ளது எனவும், திருட்டை தடுக்கும் நடவடிக்கையில் காவல்துறையினர் முன்வர வேண்டும். இரவில் அதிராம்பட்டினம் குடியிருப்பு பகுதிகளில் வாகன ரோந்தில் ஈடுபட வேண்டும்' என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.