.

Pages

Tuesday, July 26, 2016

காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தல்

காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பட்டுக்கோட்டை சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

பட்டுக்கோட்டையில் வியாழக்கிழமை நடைபெற்ற இச்சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மேலும் கூட்டத்தில், பட்டுக்கோட்டை- தஞ்சாவூர் வழித்தடத்தில் புதிய அகல ரயில் பாதை அமைக்கும் பணிகளை விரைந்து தொடங்க வேண்டும். சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்வதற்காக ஆத்திக்கோட்டை, பொன்னவராயன்கோட்டை ஆகிய கிராமங்களைத் தத்தெடுப்பது.

உள்ளாட்சித் துறை, பொது சுகாதாரத் துறை மூலம் டெங்கு கட்டுப்பாடு முன்னேற்பாட்டுப் பணிக்காக பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஆகிய ஒன்றியங்களைச் சேர்ந்த கிராமங்களில் உடனடியாக ஒட்டுமொத்த தூய்மைப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம் பகுதிகளில் போதை சாக்லெட்டுகள், தரமற்ற குளிர்பானங்கள், கலப்பட தேயிலைத்தூள், கார்பைட் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டுள்ள பழ வகைகளைக் கண்டறிந்து அழிக்க வேண்டும்.  பட்டுக்கோட்டை நகரில் ஒலிமாசினை தடுக்க வாணவேடிக்கைகள், வாகனங்களின் காற்று ஒலிப்பான்கள், கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் ஆகியவற்றை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு சங்கத் தலைவர் ஏ.ஆர். வீராசாமி தலைமை வகித்தார். நிர்வாகிகள் ஆர். வேணுகோபாலன், ஜி. ஜெயசீலன், ரெஜினால்ட் செல்வகுமார், வ. விவேகானந்தம், கந்த. கல்யாணசுந்தரம், மா. வீரபத்திரன், லாசர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நன்றி: தினமணி

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.