அதிராம்பட்டினம், ஏஜே ஜூம்மா பள்ளி மற்றும் அதிரை மகாதிப் இணைந்து நடத்திய திருக்குர்ஆன் திறன் அறிதல் போட்டி அதிராம்பட்டினம் ஏஜே நகரில் நேற்று நடைபெற்றது.இதில் குர்ஆன் முழுவதும் மனனம் செய்தல் போட்டியில் அதிராம்பட்டினம் புதுப்பள்ளி மாணவர் முதல் இடம் பிடித்து சாதனை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சிக்கு ஏஜே ஜும்மா பள்ளி நிர்வாகி அ.மு.க அமீன் ஹாஜியார் தலைமை வகித்தார். அதிரை மகாதிப் மதரஸா ஆசிரியர்கள் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் குர்ஆன் பார்த்து ஓதுதல், துஆ மனனம், சூரா மனனம், குர்ஆன் முழுவதும் மனனம் உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஏஜே ஜும்மா பள்ளி, புதுப்பள்ளி, செக்கடி பள்ளி, முகைதீன் ஜூம்மா பள்ளி, அல் பாக்கியத்தூஸ் சாலிஹாத் பள்ளி, சித்திக் பள்ளி, கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி, கலீபா உமர் (ரலி) பள்ளி, ரஹ்மானியா பள்ளி, மக்தூம் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளை சேர்ந்த மக்தப் மதரஸா மாணவர்கள் 100 பேர் கலந்துகொண்டனர்.
அதிரையில் முதன் முறையாக நடத்தப்பட்ட குர்ஆன் மனனம் போட்டியில் ஹாபிழ் மாணவர்கள் கலந்துகொண்டனர். நடுவராக இஜாபா பள்ளி இமாம் முஃப்தி அப்துல் ஹாதி பாகவி ஆலிம் பொறுப்பு ஏற்றிருந்தார்.
குர்ஆன் முழுமையாக மனனம் செய்தல் போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை நிகழ்த்திய புதுப்பள்ளி மக்தப் மதரசா மாணவர் ஜெய்து, ரூ 7 ஆயிரம் மதிப்புள்ள 6-1/2 அடி பீரோல், இரண்டாம் இடம் பிடித்து சாதனை நிகழ்த்திய ஏஜே பள்ளி மக்தப் மதரசா மாணவர் முஜாஹித், ரூ 5 ஆயிரம் மதிப்புள்ள 5-1/2 அடி பீரோல், மூன்றாம் இடம் பிடித்து சாதனை நிகழ்த்திய ரஹ்மானியா பள்ளி மக்தப் மதரசா மாணவர்அப்துல் சுக்கூர் ரூ 4 ஆயிரம் மதிப்புள்ள 4-1/2 அடி பீரோல், ஆகியன வழங்கப்பட்டது.
இதில் 15 ஜூஸ்வு வரை குர் ஆன் மனனம் செய்தல் போட்டியில் முதல் இடம் பிடித்து சாதனை நிகழ்த்திய அபூபக்கர், இரண்டாம் இடம் பிடித்த முஹம்மது, மூன்றாம் இடம் பிடித்த தஸ்லீம் ஆகியோருக்கு ரூ 3,500/ மதிப்புள்ள தலா ஒரு கேஸ் ஸ்டவ் பரிசாக வழங்கப்பட்டது.
மேலும் குர்ஆன் பார்த்து ஓதுதல், துஆ மனனம், சூரா மனனம் உள்ளிட்ட போட்டிகளில் கலந்துகொண்டு முதல் மூன்று இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிகளில் கலந்துகொண்ட அனைத்து மாணவர்களுக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டன. மேலும் பரிசு வழங்கி உதவியவர்கள்,விழாவில் கலந்துகொண்ட சிறப்பு விருந்தினர்கள், நிகழ்ச்சியை ஏற்று நடத்தியவர்கள், இணையதள ஊடக பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காயல்பட்டினம் ஜாவியா மஜ்லீஸ் பொறுப்பாளர் அப்துல்லா மக்கீ காஷிபி, அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூம்மா பள்ளி இமாம் சஃபியுல்லா அன்வாரி ஆகியோர் இஸ்லாமிய மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தினார்கள். இதில் குர்ஆன் கற்றலின் அவசியம் குறித்து வலியுறுத்தி பேசினார்கள்.
முன்னதாக சலாஹியா அரபிக் கல்லூரி முதல்வர் மவ்லவி இப்ராஹீம் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் ஏ.ஜே பள்ளி இமாம் நஜ்முதீன் ஒருங்கிணைப்பு செய்தார்.
விழா முடிவில் ஏஜே பள்ளி நிர்வாகி பேராசிரியர் பர்கத் நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் மக்தப் மதரஸா மாணவர்கள், பெற்றோர்கள், ஊர் பிரமுகர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
செய்தி மற்றும் படங்கள்:
அபூ அஜீம்
Alhamdulillah these type of function will be extern up to end of day of kiyamah inshaAllah.
ReplyDelete