.

Pages

Friday, July 22, 2016

ஏரியைக் காக்கும் பணியில் மண்ணின் மைந்தர்கள் !

பட்டுக்கோட்டை, ஜூலை 22:
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டம், சூரப்பள்ளம் பெரிய ஏரியில் உள்ள நெய்வேலிக்காட்டாமணக்குச் செடிகளை அகற்றும் பணிக்கு ரூ. 2 லட்சத்தை வழங்கியுள்ளனர் வெளிநாடுகளில் வாழும் சூரப்பள்ளம் இளைஞர்கள்.

160 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெரிய ஏரியின் மூலம் சுமார் 750 ஏக்கர் சாகுபடி நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. மேலும், இப்பகுதிக்கு மிகப் பெரிய நீர் ஆதாரமாக விளங்குவதோடு, கோடைகாலத்தில் உள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த கால்நடைகளுக்கு மேய்ச்சல் நிலமாகவும் பெரிய ஏரி திகழ்கிறது.

இந்த ஏரியின் பெரும்பான்மையான இடத்தில் தற்போது நெய்வேலிக்காட்டாமணக்கு செடிகள் ஏராளமாக மண்டிக் கிடக்கிறது. இதனால் இப்பகுதியின் நீராதாரம் கேள்விக்குறியாகி விட்டது.
   
இதையறிந்த சிங்கப்பூர் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் பணியாற்றும்  சூரப்பள்ளம் இளைஞர்கள் பலர் ஒன்று சேர்ந்து போர்க்கால அடிப்படையில் பெரிய ஏரியைப் பாதுக்காக்க முடிவு செய்தனர். ஏரியில் படர்ந்துள்ள நெய்வேலிக்காட்டாமணக்கு செடிகளை அகற்றி ஏரியை சீரமைக்கும் பணிக்காக தங்கள் சார்பில் உடனடியாக 2 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்கினர். அந்த பணத்தைக் கொண்டு ஊர் மக்கள் ஒத்துழைப்புடன் தற்போது ஏரியை புனரமைக்கும் பணி தொடங்கி முழு வேகத்தில் நடைபெற்று வருகிறது. பொக்லைன், டிராக்டர் ஆகியவற்றைக் கொண்டு ஏரியிலுள்ள நெய்வேலி காட்டாமணக்குச் செடிகள் முற்றிலுமாக அகற்றப்பட்டு வருகின்றன.

அரசு உதவியை எதிர்பார்க்காமல் தங்களது கிராம நலனுக்காக வெளிநாடு வாழ் சூரப்பள்ளம் இளைஞர்களின் செயல்பாடு பட்டுக்கோட்டை பகுதி மக்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

இதுகுறித்து இவ்வூரைச் சேர்ந்த கால்நடை மருத்துவர் வீரமணி கூறியது: சூரப்பள்ளம் இளைஞர்கள் இதுபோன்று சமூக சேவைகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவதால் ஊரிலுள்ள நீராதாரங்களை பாதுகாப்பதுடன், மற்ற கிராமங்களைச் சேர்ந்த இளைஞர்களுக்கு ஒரு முன் மாதிரியாகவும் விளங்குகின்றனர்' என்றார்.

3 comments:

  1. சூரப்பள்ளம் இளைஞர்களுக்கும், அந்தக் கிராம பொதுமக்களுக்கும் மிகுந்த பாராட்டுக்கள். இதுபோல் ஒவ்வொரு ஊர் பொதுமக்களும், இளைஞர்களும் முன் வரவேண்டும்.

    ஈகோ ஒழிய வேண்டும்,

    காழ்புணர்ச்சி அகல வேண்டும்,

    தெரு பாகுபாடு இரும்புக்கரம்கொண்டு முற்றிலும்மாக அகற்றப்பட வேண்டும்.

    பொறாமைகள் கசடுகள் முளையிலேயே கில்லி எரிய வேண்டும்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.