தமிழகம் முழுவதும் கிரஸண்ட் ப்ளட் டோனர்ஸ் ( CBD ) அமைப்பின் சார்பில் 'விபத்தில்லா தேசம் உருவாக்குவோம்' என்ற பெயர்ளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மத்தியில் விழிப்புணர்வு கருத்தரங்கு நிகழ்ச்சியை தொடர்ந்து நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் கிரஸண்ட் ப்ளட் டோனர்ஸ் ( CBD ) அமைப்பின் சார்பில் அதிராம்பட்டினம் ஈசிஆர் சாலையின் இருபுறமும் குவிந்து கிடந்த மணலை அப்புறப்படுத்தும் பணி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கிரஸண்ட் ப்ளட் டோனர்ஸ் அதிராம்பட்டினம் கிளைத் தலைவர் இப்ராஹீம் அலி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அதிராம்பட்டினம் பேரூராட்சிமன்ற பெருந்தலைவர் எஸ்.எச் அஸ்லம் கொடியசைத்து பணியை தொடங்கி வைத்தார்.
இதில் அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் முதல், காதிர் முகைதீன் கல்லூரி வரையிலான ஈசிஆர் சாலையின் இருபுறங்களிலும் குவிந்து கிடந்த மணல் முழுவதும் அப்புறப்படுத்தப்பட்டன.
முன்னதாக கிரஸண்ட் ப்ளட் டோனர்ஸ் தஞ்சை மாவட்ட தலைவர் பேராசிரியர் செய்யது அஹமது கபீர் வரவேற்றார். நிகழ்ச்சி முடிவில் கிரஸண்ட் ப்ளட் டோனர்ஸ் மாவட்ட பொருளாளர் முஹம்மது சாலிகு நன்றி கூறினார். இந்த நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கப் பொறுப்பாளர்கள் இர்பான் சேக், முத்துகிருஷ்ணன், பேராசிரியர் பிரேம் நவாஸ் மற்றும் கிரஸண்ட் ப்ளட் டோனர்ஸ் அதிராம்பட்டனம் கிளைப் பொறுப்பாளர்கள் ஹாஜா முகைதீன், ஹசன் உள்ளிட்ட கிரஸண்ட் ப்ளட் டோனர்ஸ் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
வாழ்த்துக்கள்
ReplyDeleteவாழ்த்துக்கள்
ReplyDelete