.

Pages

Monday, July 25, 2016

அபுதாபியில் சாலை விதிகளை மீறுபவர்களுக்கு இனி அபராதத்தில் சலுகை கிடையாது

அபுதாபி எமிரேட்டில் கடந்த 2015 ஆண்டு முதல் காலண்டில் நடந்த 54 சாலை விபத்து மரணங்களை ஒப்பிடும் போது 2016 ஆம் ஆண்டு முதல் காலண்டில் 77 சாலை விபத்து மரணங்களாகவும், மற்ற வகை சாலை விபத்துக்கள் 477 இருந்து 489 ஆகவும் அதிகரித்துள்ளது. ஆக, 42 சதவிகிதம் சாலை விபத்துக்களும் அது தொடர்பான விதிமீறல் குற்றங்களும் அதிகரித்துள்ளதன் விளைவாக,

அபுதாபியில் 2010 ஆம் ஆண்டு முதல் அமலில் இருக்கும் சாலை விதிகளை மீறும் வாகன ஒட்டுனர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தில் 50 சதவிகிதம் மட்டும் செலுத்தினால் போதும் என்றிருந்த தள்ளுபடி சலுகை எதிர்வரும் 2016 ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ரத்து செய்யப்படுகிறது. (அதற்கு முதல் வரை விதிக்கப்படும் அபராத தள்ளுபடியில் மாற்றமில்லை)

ரத்து செய்ய காரணம்
மேற்கூறியவற்றிலிருந்து 88 விபத்துக்கள் தெளிவான, சீரான வானிலை நிலவும் போது ஒட்டுனர்களின் அலட்சியத்தால் நிகழ்ந்தவை.

15 சதவிகித விபத்துக்கள் முன்னெச்சரிக்கை இன்றி தடலடியாக வாகனத்தை திருப்பியதால் ஏற்பட்டவை, இது கடந்த ரமலான் மாதத்தில் தான் அதிகமாம்.

13 சதவிகித குற்றங்கள் வாகனங்களுக்கிடையே போதிய இடைவெளியை பேணாததால் ஏற்பட்டவை.

மற்றவை, மிக அதிக வேகம், ஒரு டிரேக்கிலிருந்து மற்றொரு டிரேக்கிற்கு அலைமோதுமல், சிக்னலில் தாவுதல் ஆகிய குற்றங்களில் சேரும்.

யார் அந்த அலட்சிய ஒட்டுனர்கள்
44 சதவிகித குற்றங்கள் 18 முதல் 33 வயதுடைய இளம் ஒட்டுனர்களால் ஏற்படுத்தப்பட்டவை (ஏரோப்ளேன் ஒட்ற நெனப்பா இருந்திருக்கும்!)

31 சகவிகித குற்றங்கள் 31 முதல் 45 வயதுடையவர்கள் (குடும்ப பிரச்சனையை ரோட்ல காமித்திருப்பாங்களோ!)

15 சதவிகித குற்றங்கள் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களால் நிகழ்த்தப்பட்டதாம் (பக்கிக இங்கேயுமா!)

பொதுவான போக்குவரத்து குற்றங்களும் அதற்கு அபுதாபியில் தற்போது விதிக்கப்படும் அபராதமும் ஓர் பார்வை

இதில் குறிப்பிடப்படும் கரும்புள்ளிகள் இறுதியாக ஓட்டுனர் உரிமத்தையே ரத்து செய்ய வைக்கும் வல்லமையுடையவை என்பது குறிப்பிடத்தக்கது.

1. ஓட்டுனர் கவனக்குறைவு மற்றும் ரேஸ் விடுதல் 2000 திர்ஹம் + 12 கரும்புள்ளிகள்

2. பதிவு செய்யப்பட்ட நம்பர் பிளேட் அன்றி வாகனத்தை ஓட்டினால் 1000 திhஹம் + 24 கரும்புள்ளிகள்

3. அனுமதிக்கப்பட்ட வேகத்திற்கு மேலதிகமாக 60 km/h சென்றாலே 1000 திர்ஹம் + 12 கரும்புள்ளிகள்

4. பாதசாரிகளை அச்சுறுத்தும் வகையில் வாகனத்தை ஓட்டினால் 1000 திர்ஹம் + 12 கரும்புள்ளிகள்

5. தீயணைப்பு கருவிகள் முன்பாக அல்லது அவசரகால ஊர்திகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் வாகனங்களுக்கு இடைஞ்சல் தரும் வகையில் செயல்பட்டால் 1000 திர்ஹம் + 4 கரும்புள்ளிகள்

6. போலீஸாரிடமிருந்து தப்பித்து ஓட முயன்றால் 800 திர்ஹம் + 12 கரும்புள்ளிகள்

7. டிரக் ஒட்டுனர் அபயகரமான முறையில் மற்ற வாகனங்களை முந்திச் செல்ல முயன்றால் 800 திர்ஹம் + 24 கரும்புள்ளிகள்

8. அச்சுறுத்தும் வகையில் பிற வாகனங்களை முந்திச் சென்றால் 600 திர்ஹம் + 6 கரும்புள்ளிகள்

9. விபத்து ஏற்படுத்திய பின் நிற்காமல் சென்றால் 500 திர்ஹம் + 6 கரும்புள்ளிகள்

10. பாதுகாப்பு பட்டியை (சீட் பெல்ட்) அணியாமல் சென்றால் 400 திர்ஹம் + 4 கரும்புள்ளிகள்

11. இரு வாகனங்களுக்கிடையிலான பாதுகாப்பான தூரத்தை கடைபிடிக்காவிட்டால் 400 திர்ஹம் + 4 கரும்புள்ளிகள்.

வண்டி ஓட்ற நாமலே சூதனமா நடந்துக்கிட்ட மேலே சொன்ன எதப்பத்தியும் கவலப்பட வேணாந்தானே! என்ன நாஞ் சொல்றது செரிதானே!

Source: Gulfnews
Dated: 24.07.2016
தமிழில் நம்ம ஊரான்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.