.

Pages

Saturday, July 23, 2016

புத்தக திருவிழாவினையொட்டி சிறப்பு தபால் தலை வெளியிடு !

தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் புத்தக திருவிழா மற்றும் கலைநிகழ்ச்சிகள் கடந்த 15.07.2016 அன்று முதல் தொடங்கி 25.07.2016 வரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. புத்தக திருவிழாவினை பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக இந்திய அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் வில்லை மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் வெளியிட்டார்.

சிறப்பு அஞ்சல் வில்லை மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன்அவர்கள் வெளியிட அஞ்சல் துறை முதுநிலை கண்காணிப்பாளர் திரு.பஞ்சாபகேசன் அவர்கள் பெற்றுக் கொண்டார்.

அஞ்சல் வில்லை வெளியீட்டு மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:
சிறப்பாக செயல்பட்டு வரும் புத்தக திருவிழாவினை பிரபலப்படுத்தும் வகையில் சிறப்பு அஞ்சல் வில்லை வெளியிடப்பட்டுள்ளது. 5 ரூபாய் அஞ்சல் வில்லை வெளியிடப்பட்டு பொது மக்களுக்கு புத்தக திருவிழா தொடர்பான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.  சரஸ்வதி மகால் நூலகம் புத்தக திருவிழாவில் பங்கேற்றுள்ளதை குறிக்கின்ற வகையில் சரஸ்வதி மகால் நூலகத்தின் குறியீடு இடம் பெற்றுள்ளது. கடந்த 8 நாட்களில் புத்தக திருவிழாவில் 1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டுள்ளனர். அதில் 60 முதல் 70 ஆயிரம் மாணவ மாணவியர்கள் அடங்குவர்.  இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில் இன்னும் அதிக அளவில் மக்கள் வரக்கூடும் என்பதால் கூடுதல் புத்தகங்கள் வரவழைக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. புத்தக திருவிழாவில் 5 ரூபாய் முதல் 5 ஆயிரம் ரூபாய் வரையிலான புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. சுமார் 75 ஆயிரம் புத்தகங்களுக்கு மேல் விற்பனையாகியுள்ளது.  இதன் மதிப்பு சுமார் ரூ.1 கோடியாகும்.  கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பள்ளி மாணவ மாணவியர்களும், கல்லூரி மாணவ மாணவியர்களும் அதிக அளவில் கலந்து கொண்டுள்ளார்கள்.

தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகம் விஜயநகரப் பேரரசின் காலத்தில் சரஸ்வதி பண்டார் என்றும் மராத்தி மொழியில் சரஸ்வதி மகால் எனவும் அழைக்கப் பெற்று மராத்திய மன்னர் இரண்டாம் சரபோஜியால் பேணி பாதுகாக்கப்பட்டு சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம் என அழைக்கப்பட்டு வருகிறது.  பன்மொழி நூல்கள் மற்றும் சுவடிகளின் சங்கமமாக கற்பனை அனைத்திற்கும் அறிவு ஊருணியாய் தமிழ், ஆங்கிலம், மராத்தி ஆகிய மொழிகளில் சரஸ்வதி மகால் என்ற குறிப்பேடு கல்வியை போதிக்கும் கலைமகளின் உருவப்பொறிப்போடு, இவ்வடையாளப் பொறிப்புடன் தஞ்சாவூர் புத்தக திருவிழா 2016னைக் குறிப்பிட்டு அஞ்சல் வில்லை (My Stamp ) வெளியிடப்பட்டுள்ளது. பல இடங்களில் தேடி புத்தகங்கள் வாங்குவது மூலம் காலம், நேரம் விரயமாவதை தவிர்த்து ஒரே இடத்தில் பல்வேறு பதிப்பகங்களின் புத்தகங்கள் கிடைக்கும் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி, புத்தகம் படிக்கும் பழக்கத்தினை உருவாக்கிக் கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.

இந்நிகழ்ச்சியில் சரஸ்வதி மகால் நிர்வாக அலுவலர் திருமதி. அ.பூங்கோதை, சுற்றுலா அலுவலர் திரு.ராஜசேகர், நூலகர் திரு.எஸ்.சுதர்சன், சமஸ்கிருத பண்டிதர் முனைவர் ஆ.வீரராகவன் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.