தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்திரவிற்கிணங்க தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவராக திரு. ஆ.அண்ணாதுரை அவர்கள் இன்று (31.07.2016) மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்துத்துறை திட்டங்கள் அனைத்தும் தொடர்ந்து செம்மையாக செயல்படுத்தப்படும். விவசாயம் அதிகம் நடைபெறும் மாவட்டம் என்பதால் விவசாயப் பணிகள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்ற துரித நடவடிக்கைகள் எடுக்கப்படும். பொது மக்களின் குறைகளை தீர்க்கவும், பெறப்படும் பொது மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மாவட்டத்தின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளவர்கள் மற்றும் பொது மக்கள் எந்த நேரத்திலும் தொடர்பு கொண்டு தங்கள் கருத்துக்கள் மற்றும் குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.ஆ.அண்ணாதுரை அவர்கள் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரு.ஆ.அண்ணாதுரை அவர்கள் இதற்கு முன் சென்னை மாநகராட்சி துணை ஆணையராக பணியாற்றியுள்ளார்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பேற்ற திரு.ஆ.அண்ணாதுரை அவர்களுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திரு.சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர்கள் திரு.ஜெய்னுலாப்தீன் (பொது), திரு.சொக்கலிங்கம் (விவசாயம்), மாவட்ட வழங்கல் அலுவலர் திரு.கங்காதரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) திரு.கோபு, திருமதி.சித்ரா (ஊ.வ), மற்றும் அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் மாவட்ட ஆட்சியர் பணியாளர்களும் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.