.

Pages

Monday, July 18, 2016

பிறை விவகாரம்: அதிரை ஆலிம்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் !

இந்த வருட ஈதுல் ஃபித்ரு பெருநாளில் தான் எத்தனை சங்கடங்கள்! குழப்பங்கள்!

1. பெருநாளா? மறுநாளா?
2. கொண்டாட்டமா? திண்டாட்டமா?
3. நோன்பு வைப்பதா? விடுவதா?
4. நோன்பை விடுவது அல்லது பெருநாளை விடுவது ஹராமா? ஹலாலா?
5. ஒரே வீட்டினுள் சிலர் முதல் நாளும், சிலர் அடுத்த நாளும் என 2 நாட்கள் பெருநாள் கொண்டாடுவது சரியா?
6. ஒரே ஊருக்குள் 2 பெருநாட்கள் வருவது சரியா? (ஒரு குழுவினர் மிகச்சில வருடங்களுக்கு முன் 3 வது நாளும் தனித்து பெருநாள் கொண்டாடிய அதிசயமும் நடந்துள்ளது)
7. முதல் நாள் பெருநாள் அறிவிக்கப்பட்டதால் பேணுதலுக்காக நோன்பை விட்டுவிட்டு அடுத்த நாள் பெருநாளை மட்டும் கொண்டாடுவது சரியா?
8. 30வது இரவில் மஃரிப் தொழுகை முடிந்தது முதல் பிறை குறித்து (ஏற்று அல்லது மறுத்து) அறிவிப்பு வெளியிடுவார்கள் என இரவின் நெடுநேரம் வரை அதிரை அறிஞர்கள் மீதுள்ள நம்பிக்கையில் மக்கள் காத்திருந்து கஷ்டப்பட்டது முறையா?
9. கொண்டாடத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றான பெருநாள் தின சிறப்பு சமையல் குறித்து பெண்கள் முடிவெடுக்க முடியாது அல்லாடவிட்டது நியாயமா?
10. ஆண்களில்லா வீட்டிலுள்ள பெண்கள் இரவெல்லாம் அறிவிப்பை எதிர்பார்த்திருந்து விட்டு அடுத்த நாள் காலையில் சமையல் செய்வார்களா? அல்லது பெருநாள் தொழுகைக்கு தயாராவார்களா?

என இன்னும் மக்கள் சந்தித்த சங்கடங்களின் பட்டியலை நீட்ட முடியும் என்றாலும் அதிரை மக்களின் மனங்களை உணர்ந்து கொள்ள இதுவே போதுமானது.

மேற்படி புயலடித்து ஒய்ந்துள்ள இந்த சூழலே பிறை குறித்து நமதூர் ஆலிம்களுக்கு வேண்டுகோள் விடுக்க சரியான தருணமாக கருதுகிறோம். இந்த வருட ரமலான் பெருநாள் பலத்த பெரும் சர்ச்சைகளுக்கிடையே கடந்து சென்று விட்டது. சர்ச்சையின் பிரதான காரணங்களாக நாங்கள் 4 விஷயங்களை கருதுகிறோம்.

1. நம்பகமற்றவர்களாக மக்களால் கருதப்படும் ஒரு குழுவினரால் முதலில் பிறை அறிவிக்கப்பட்டது.
2. நம்பகமானவராக தெரிந்த தலைமை காஜியின் பிறை அறிவிப்பு பல்வேறு காரணிகளால் மக்களின் நம்பிக்கையை தகர்த்தது.
3. காயல்பாட்டிணத்திலிருந்தும், இலங்கையிலிருந்தும் வந்த மதுஹப் ஆதரவு மக்களின் நம்பகமான பிறை அறிவிப்புகளை, மக்களின் கவனத்திற்கு கூட கொண்டு வராமல் இருட்டடிப்பு செய்யப்பட்டது.
4. எங்களுக்கு கிடைத்த நம்பகமான தகவலின்படி, பிறை காணும் முன்பாகவே பெருநாள் விடுமுறை நாளாக வியாழக்கிழமையை (செவ்வாய்க்கிழமை மாலை 3 மணிக்கெல்லாம் அரசு அலுவலகங்களில் சுற்றறிக்கை மூலம்) திணித்து விட்ட தமிழக அரசினரின் காரணம் அறிவிக்கப்படாத நிர்ப்பந்தம். (உண்மை நிலையை இதன் விபரமறிந்த த.ந.அரசு ஊழியர்கள் தெளிவுபடுத்தினால் நல்லது)

மேற்படி காரணிகளை பலரும் பலவாறாக ஆய்ந்துவிட்ட நிலையிலும், தூவானமாய் சிலர் அப்பாடா! நல்லவேளை எங்கள் கட்சி தற்போது ஆட்சியிலில்லை என நிம்மதி பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் நிலையிலும் மேலும் எங்கள் பங்கிற்கு உரசிக் கொண்டிருக்காமல் அதிரை ஆலிம்களிடம் சமர்ப்பிக்க நினைக்கும் எங்கள் கருத்தினுள் நுழைகிறோம்.

வரலாற்று பூர்வமாக நம் அதிரை மக்கள் பிறை விஷயத்தில் நமதூர் ஆலிம்களின் தீர்ப்பை பின்பற்றியே நோன்பையும் பெருநாளையும் கடைபிடிக்கக் கூடியவர்களாக இருந்துள்ளோம்.

நமதூர் ஆலிம்கள் பிறை பார்க்க வேண்டிய நாட்களில் அன்றைய 'மரைக்கா பள்ளியில்' கூடி உள்ளூர் பிறையின் அடிப்படையிலோ அல்லது வெளியூர் பிறையின் அடிப்படையிலோ அல்லது அதிரையிலிருந்து சுமார் 25 கி.மீ. தூரமேயுள்ள இலங்கை பிறையின் (அன்றைய காலத்தில் நம் தொடர்பு எல்லைக்குள்ளிருந்த ஒரே சர்வதேச பிறை) அடிப்படையிலோ இன்றுபோல் தொலைத்தொடர்பு வசதிகளற்ற முந்தைய காலங்களில் பிறை அறிவிப்பை விடுத்து வந்தனர்.

இலங்கை பிறை என்பது பலமுறை இலங்கை வானொலியின் அறிவிப்பை 'கேட்டு' ஏற்பதாகவே இருந்ததும் உண்மை. ஊருக்கு ஒரு சில போன்கள் மட்டுமே அபூர்வமாக இருந்தபோதும் அவற்றினூடாகவும் பிறை பார்த்தலை கேட்டு உறுதி செய்து கொண்டுள்ளோம். நமதூர் ஆலிம்களின் மசூரா அடிப்படையிலான பிறை அறிவிப்பை மதுக்கூர், முத்துப்பேட்டை, புதுப்பட்டினம், மல்லிப்பட்டினம் போன்ற நமது பக்கத்து ஊரார்களும் ஏற்று செயல்படுத்தி வந்தனர் என்பதும் யாரும் மறுக்கவோ, மறைக்கவோ முடியாத வரலாறு.

ஏன் அப்போது சர்ச்சைகள் எழவில்லையா? எழுந்தன, ஆனால் அவை ஏன் எங்கள் பகுதிக்கு நேரத்தோடு தகவல் சொல்லி அனுப்பவில்லை? ஏன் மிகத் தாமதமாக அறிவிக்கின்றீர்கள் என்ற அளவிலேயே இருந்தன என்றாலும் மக்கள் ஆலிம்களிம் பிறை தீர்ப்பை ஏற்றுக் கொண்டனர். நாங்கள் அறிந்து ஒரேயொரு வருடம் மட்டும் தகவல் அறிவிப்பு அவர்களிடம் நேரத்திற்கு சொல்லப்படாத காரணத்தால் ஆலிம்களின் பிறை அறிவிப்பை சில தெருக்கள் மட்டும் ஏற்கவில்லை என்பதாக எங்கள் ஞாபகம். சர்ச்சைகள் எத்தனை எழுந்து அடங்கினாலும் அதிரைக்கு பெருநாள் தினம் என்பது ஒரே தினமாகத் தான் இருந்தது.

பல வருடங்கள் மக்கள் சுபுஹூக்குப்பின் காலை வேளையை அடைந்த நிலையில் வெளியூர்களில் பிறை பார்த்த நம்பகமாக செய்திகள் தாமதமாக கிடைத்து அதிரை ஆலிம்களால் பெருநாள் அறிவிக்கப்பட்டுள்ளன என்பதற்கு அல்லாஹ்வின் அருளால் இன்னும் ஆயுள் நீட்டிக்கப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கானோர் வாழும் சாட்சி.

மேலும், தலைமை காஜி அல்லது மாவட்ட காஜி அல்லது டவுன் காஜி அல்லது உள்ளூர் காஜி என்பன போன்ற தமிழக அரசு ஊழியர்களின் அறிவிப்பின் அடிப்படையில் அதிரையில் பிறை அறிவிப்புகள் செய்யப்பட்டதே இல்லை என்பதையும் பிறை ஆலோசணை அமர்வுகளில் பங்கு கொண்டு வந்த, இன்னும் அல்லாஹ்வின் அருளால் ஹயாத்துடன் உள்ள ஆலிம்கள் மறுக்க மாட்டீர்கள் என நம்புகின்றோம். ஒருவேளை இத்தகவல் பிழையென்றால் எங்கள் கருத்தை திரும்பப் பெற்றுக் கொள்கின்றோம்.

அரசு காஜிகள், அமைப்பு காஜி, (அரசியல் கூட்டணி தர்ம) ஹிலால் கமிட்டி, அனைத்து தேசிய, மாநில இயக்கங்களின் பிறை அறிவிப்புகள், கணிப்புகள் போன்ற குழப்பங்கள் பெருகியுள்ள நிலையில் அவைகளின் அறிவிப்புகளை பொருட்படுத்தாமல், அதேவேளை இன்று தகவல் தொழிற்நுட்பங்கள் பெருகியுள்ள நிலையில், திறந்த மனதுடன் சர்வதேசப் பிறை முதல் உள்ளூர் பிறை வரை நாம் ஏற்று ஆலோசித்து அதிரையில் முன்பு அமல்படுத்தியவர்கள் என்ற கடந்த கால வரலாற்றை மீண்டும் நம்மால் செயல்படுத்திட இயலும் என்ற இறை சார்ந்த நம்பிக்கை மேலோங்குவதாலும் அதிரை ஆலிம்கள் மீண்டும் அதிரைக்கான ஒரு பிறை கமிட்டியை ஏற்படுத்தி அதில் புற உறுப்பினர்களாக பள்ளிக்கு ஒருவரையும், உங்களோடு பிறை விஷயத்தில் ஒத்துவருகின்ற உள்ளூர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இடம் பெறச்செய்து, பிறை பார்க்கப்பட வேண்டிய நாளில் சர்வதேசம் முதல் உள்நாடு, மாநிலம், மாவட்டம், வட்டம், உள்ளூர் என அனைத்து நம்பகத் தகவல்களையும் திறந்த மனதுடன் அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக ஆய்ந்த மசூரா முடிவினை அதிரைக்கான பிறை மற்றும் பெருநாளாக அறிவிக்க முன்வர வேண்டும் என அன்புடன் அழைக்கின்றோம்.

இனியொரு முறை இயக்கங்களோ, காஜிகளோ, அரசோ நமது அதிரையின் பிறை நாட்களை தீர்மானிக்க நாம் இடமளிக்க வேண்டாம். பிறை பார்த்த, பார்த்ததை கேட்ட நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் நோன்பை நோற்கவும், பெருநாளை கொண்டாடவும் மீண்டும் அதிரையர்கள் அனைவரும் முன்வர வேண்டும் அதற்கு முன்முயற்சிகளை அதிரை ஆலிம்கள் இப்போதே துவங்க வேண்டும் என அன்புடன் வேண்டுகிறோம்.

வரும் ஹஜ்ஜூப் பெருநாளாவது அதிரையர் அனைவரும் முன்பு போல் ஒரே நாளில் கொண்டாடிய பெருநாட்கள் போல் அமைய எல்லாம் வல்ல ரஹ்மானிடம் பிரார்த்திக்கின்றோம்.

வேண்டுதல்: 
ஆலீம்களுடன் தொடர்புடைய உள்ளூர் சகோதரர்கள் இந்த வேண்டுகோளை அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். இது பல நல்ல புரிந்துணர்வுகளுக்கு இனிய துவக்கமாய் அமையட்டும்.

இவண்
அமீரகம் வாழ் அதிரை சகோதரர்கள்

11 comments:

  1. kodiyai vaitthu ithu nabvazhi yenru solbavarkalellam allahukkuanjungal

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் நல்ல முயற்சி
    அதிரையை மட்டும் பார்க்காமல் தூரநோக்குடன் பார்ப்போம்.

    ReplyDelete
  3. // இன்று தகவல் தொழிற்நுட்பங்கள் பெருகியுள்ள நிலையில், திறந்த மனதுடன் சர்வதேசப் பிறை முதல் உள்ளூர் பிறை வரை நாம் ஏற்று ஆலோசித்து அதிரையில் முன்பு அமல்படுத்தியவர்கள் என்ற கடந்த கால வரலாற்றை மீண்டும் நம்மால் செயல்படுத்திட இயலும் என்ற இறை சார்ந்த நம்பிக்கை மேலோங்குவதாலும் அதிரை ஆலிம்கள் மீண்டும் அதிரைக்கான ஒரு பிறை கமிட்டியை ஏற்படுத்தி அதில் புற உறுப்பினர்களாக பள்ளிக்கு ஒருவரையும், உங்களோடு பிறை விஷயத்தில் ஒத்துவருகின்ற உள்ளூர் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் இடம் பெறச்செய்து, பிறை பார்க்கப்பட வேண்டிய நாளில் சர்வதேசம் முதல் உள்நாடு, மாநிலம், மாவட்டம், வட்டம், உள்ளூர் என அனைத்து நம்பகத் தகவல்களையும் திறந்த மனதுடன் அல்லாஹ்விற்கு அஞ்சியவர்களாக ஆய்ந்த மசூரா முடிவினை அதிரைக்கான பிறை மற்றும் பெருநாளாக அறிவிக்க முன்வர வேண்டும் என அன்புடன் அழைக்கின்றோம்.//

    மிக நல்ல யோசனை. இந்த யோசனை நடைமுறையில் வருவதற்கு அல்லாஹ்விடம் துஆ செய்கிறேன்

    ReplyDelete
  4. //இனியொரு முறை இயக்கங்களோ, காஜிகளோ, அரசோ நமது அதிரையின் பிறை நாட்களை தீர்மானிக்க நாம் இடமளிக்க வேண்டாம். பிறை பார்த்த, பார்த்ததை கேட்ட நம்பத்தகுந்த தகவலின் அடிப்படையில் நோன்பை நோற்கவும், பெருநாளை கொண்டாடவும் மீண்டும் அதிரையர்கள் அனைவரும் முன்வர வேண்டும் //

    இதெல்லாம் சரிதான்....! ஆனால் கட்டுரையின் ஆரம்பத்திலேயே இரண்டு பெருநாள் கொண்டாட ஆரம்ப காரணமானவர்களையும் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.
    //1. நம்பகமற்றவர்களாக மக்களால் கருதப்படும் ஒரு குழுவினரால் முதலில் பிறை அறிவிக்கப்பட்டது.//

    நீங்கெல்லாம் ஒன்று கூடி முடிவெடுத்து அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் மீண்டும் அதே இரண்டு பெருநாள் சாத்தியம் தானே....!.

    (ஒருவேளை முஸ்லிம்களுக்கு இரண்டு பெருநாள் (நோன்பு,ஹஜ்) என்பதை இரண்டு நாள் பெருநாள் என்று தவறாக புரிந்து கொன்றார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது....!)

    எனவே அணைத்து அதிரை மக்களும் ஏற்றுக்கொள்ளத்தக்க ஒரு தீர்வை முன்வைப்பது தான் சாத்தியம்.

    வரும் ஆனால் வராதுதான் போங்கோ....!

    உதாரணமாக தவ்ஹீத் ஜமாஅத் முன்வைத்த பிறை அறிவிப்பை அதிரை ஆலிம்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

    அதிரை ஆலிம்கள் முன்வைத்த அடுத்த நாள் தான் பெருநாள் எனற அறிவிப்பை தவ்ஹீத் ஜமாஅத் எறுக்கொள்ளவில்லை.

    இந்த இரண்டு குரூப்ப்பும் என்னையும் தண்ணீரும் போல ஒன்று சேர சாத்தியம் குறைவு.

    ReplyDelete
  5. பெருநாள் கொண்டாட்டம் இப்போ காமெடியாக மாறிவருகிறது; ஒரு தவ்ஹீது நபர் எனக்கு போன் செய்து நீங்க நோன்பா வைத்திருக்கிறீங்க என்றார் ஆமாம் என்றேன் இன்றைக்கு பெருநாள் அதனால நீங்க நோன்பை விட்டுவிடுங்கள்; பிரதமர் மோடியின் வலியுறுத்தலால் நாளை இந்தியாவில் பெருநாளாக அறிவித்து இருக்கிறார்கள் என்றார் அதற்கு நான் நேற்று ரஸ்யாவில் பெருநாள் கொண்டாடி இருக்கிறார்கள் அதற்கு காரணம் பராக் ஒபாமாவா என்றேன்; அதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறது என்று அதனை அனுப்பி வைக்கிறேன் என்று சொல்லி அழைப்பை துண்டித்து விட்டார்.

    ஒருத்தரிடம் EID முபாரக் என்றேன் அதற்கு இப்படி வாழ்த்து சொல்லாதீங்க அந்த வார்த்தை குரானில் இல்லை எந்த இடத்திலும் நபி பயன்படுத்தவில்லை என்றார் ஆச்சர்யமாக இருந்தது காலகாலமாக சொல்லிவருகிறோம் இவரு இப்படி சொல்லுறாரே என்ற ஆச்சர்யத்தோடு எப்படி சொல்லுறீங்க என்றேன் அதற்கு அவரு PJ சொல்லி விட்டார் என்று சொன்னார் அதற்கு நான் "அவனா நீ "என்றேன்.

    சிலர் வீட்டிலோ நோம்பை வைத்தவர்கள் கணவனின் வறுபுறுத்தலால் நோம்பை வீட்டு விட்டார்கள் இந்த கொடுமையெல்லாம் இப்போ தான் காணமுடிகிறது. ஆலிம்கள் இன்னமும் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதால் மேலும் அமைப்புகள் உருவாகும்.. கொடுமைங்கோ!

    ReplyDelete
  6. மண்ணிக்கவும் மஸ்தான்கணி.. யாரும் உறங்கவில்லை.. மேற்கண்ட விஷயங்கள் அணைத்துமே கொள்கை குழப்பவாதிகளால் ஏர்பட்டது...அதர்க்கும் ஷரியத்திற்கும் சம்மந்தமில்லை.

    ReplyDelete
  7. மண்ணிக்கவும் மஸ்தான்கணி.. யாரும் உறங்கவில்லை.. மேற்கண்ட விஷயங்கள் அணைத்துமே கொள்கை குழப்பவாதிகளால் ஏர்பட்டது...அதர்க்கும் ஷரியத்திற்கும் சம்மந்தமில்லை.

    ReplyDelete
  8. Haja Sheriff. A:
    காஜி என்ற ஒரு தலைமைக்கு பின் மற்ற எதுவும் செல்லாது... நமது பாரம்பரியத்தை காஜிக்கு உட்பட்டு (கட்டுபட்டு) வைப்பதே ஷரீயத்.. இதைத்தான் நமதூர் உலமாக்கள் பின்பற்றி இருக்கிறார்கள். .. ஹைர்

    ReplyDelete
    Replies
    1. அப்ப கடந்த காலங்களில், சென்னை உள்ளிட்ட வெளியூர்களில் நோன்பு நோற்கும் நாளில், நமதூரில் சிலோன் பிறை அடிப்படையில் பெருநாள் கொண்டாடிய நிகழ்வுகளை எப்படி எடுத்துக் கொள்வது? அந்த நேரத்தில் நமதூர் மௌலவி பெருமக்கள் தலைமை காஜிக்கு மாறு செய்யவில்லையா?

      Delete
  9. kodiya paavikal kodiyaivaithu koothadikkiraakal avarkal markazyenru sollikkondu moovarnakodivaithu muttipodukiraarkal

    ReplyDelete
  10. kodiya paavikal kodiyaivaithu koothadikkiraakal avarkal markazyenru sollikkondu moovarnakodivaithu muttipodukiraarkal

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.