.

Pages

Friday, July 22, 2016

அரசு போக்குவரத்து ஓட்டுனரின் மனிதநேயம்: தலைமை ஆசிரியர் பாராட்டு !

அதிராம்பட்டினம், ஜூலை 22
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் அடுத்துள்ள ஏரிப்புறக்கரை கிராமத்தை சேர்ந்தவர் ரவீந்தரன். மீனவர். இவரது மகன் மணிமாறன். திருச்சியில் கேட்டரிங் கல்லூரியில் தொழிற்கல்வி படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் திருச்சியிலிருந்து அரசு போக்குவரத்து பேருந்தில் தஞ்சை வந்த போது இவரது பத்தாம், பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்கள் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாற்றுச்சான்றிதழ் ஆகியவற்றை பேருந்தில் தவறவிட்டுள்ளார்.

இதையடுத்து பேருந்து ஓட்டுனர் தமிழ்தாசன் என்பவர் பேருந்தில் கேட்பாரற்று கிடந்த பையை எடுத்துப் பார்த்துள்ளார். அதில் சான்றிதழ்கள் இருந்தன. இதையடுத்து அதில் இருந்த பள்ளியின் முகவரியை தொடர்பு கொண்டு பேசியபோது, அந்தப் பை காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவன் மணிமாறன் தவறவிட்டது எனத் தெரியவந்தது.

இதையடுத்து, சான்றிதழ்களை பள்ளி தலைமை ஆசிரியர் மஹ்பூப் அலி அவர்களின் முன்னிலையில் மாணவன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க தமிழ்தாசன் முடிவு செய்து,  அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு இன்று மாலை வந்தார்.

உடனே பள்ளி தலைமை ஆசிரியர் மஹ்பூப் அலி  மாணவனின் தாய் தேவிகா பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு பேருந்தில் தவறவிட்ட இவரது மகனின் சான்றிதழ்கள் அனைத்தும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டன.

தனது பணி நேரத்தை ஒதுக்கி சுமார் 110 கிலோ மீட்டர் தொலைவிலிருந்து நேரில் வந்து சான்றிதழ்களை உரியவரிடம் ஒப்படைத்த அரசு போக்குவரத்து ஓட்டுனரின் நேர்மை, மனிதநேயத்தை தலைமை ஆசிரியர் மஹ்பூப் அலி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும் பள்ளி மற்றும் பெற்றோர் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டு சன்மானம் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.