தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் கடந்த 15.07.2016 அன்று தொடங்கிய புத்தக திருவிழா நேற்று (25.07.2016) அன்று நிறைவு பெற்றது.
புத்தக திருவிழா நிறைவு விழாவில் கலந்து கொண்டு மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன்அவர்கள் தெரிவித்ததாவது:
தஞ்சாவூர் புத்தக திருவிழா கடந்த 10 நாட்கள் சிறப்பாக அரண்மனை வளாகத்தில் நடைபெற்றது. 120க்கு மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. தஞ்சை மாவட்ட மக்கள் மட்டுமல்லாமல் அருகில் இருந்த மாவட்ட மக்களும் இந்த பத்தக திருவிழாவில் கலந்து கொண்டனர். கடந்த 10 நாட்களில் 2 இலட்சம் பொது மக்கள் இந்த புத்தக திருவிழாவில் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். சுமார் 2.50 கோடி மதிப்பிலான 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் விற்பனை யாகியுள்ளன. பொது மக்கள் மற்றும் மாணவர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் அடுத்த ஆண்டும் புத்தக திருவிழா நடைபெறும். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.
அதன் பின்னர் கலைநிகழ்ச்சிகள் மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு பொருட்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் டாக்டர் என்.சுப்பையன்அவர்கள் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் திட்ட இயக்குநர் திரு.சீனிவாசன், மாவட்ட சுற்றுலா அலுவலர் திரு.ராஜசேகரன், கருத்துரையாளர் பர்வீன் சுல்தானா ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.