.

Pages

Saturday, July 23, 2016

பட்டுக்கோட்டையில் கயிறு பொருட்கள் விழிப்­பு­ணர்­வு பிர­சார வாக­ன கண்காட்சி ! [ படங்கள் ]

பட்டுக்கோட்டை, ஜூலை 23
பட்டுக்கோட்டையில் தென்னை நாரில் இருந்து சிறு குறு தொழில் துவங்க விழிப்புணர்வு பிரச்சார வாகன கண்காட்சி நடைபெற்றது.

பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில் மத்திய அரசின் சார்பில் தென்னை நாரில் இருந்து சிறு குறு தொழில் துவங்க உள்ள வாய்ப்புகள் மற்றும் அதற்கான வழிமுறைகள், மேலும் தென்னை மட்டை நாரில் இருந்து தரைவிரிப்புகள், கைவினைபொருட்கள், டைல்ஸ்கள் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்க உள்ள வழிமுறைகள் அந்த தொழிலிலை செய்ய விரும்பும் தென்னை விவசாயிகள் அதற்கான இயந்திரங்கள் மற்றும் பயிற்சியினை பெற்று தொழிலின் மூலதனத்தில், மத்திய அரசின் சார்பில் 40 சதவீதம் மானியமாக பெற்றிடவும், தென்னை தொழில் சார்ந்த விவசாயிகள் இந்த வகை தொழிலை துவங்க ஊக்கப்படுத்தும் நோக்கத்திலும் இந்த பிரச்சார வாகனம் கோயம்புத்தூரில் துவங்கி பழனி, ஒட்டன்சத்திரம், கரூர் என பல பகுதிகளை கடந்து இன்று பட்டுக்கோட்டையில் காட்சிக்கு வைக்கப்பட்டது,

கோவையில் துவங்கிய இந்த சிறு குறு தொழில் வழிகாட்டு விழிப்புணர்வு பயணம் இந்தியா முழுவதும் செல்ல திட்டமிடப்பட்டு நடத்தப்படுவதாக அதன் ஏற்பாட்டாளர்கள் கூறினார். பொதுமக்களும் தென்னை விவசாயிகளும் பெருமளவில் பார்வையிட்டு விண்ணப்பங்களை வாங்கி சென்றனர்.
 
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' ஐ.எம் ராஜா, பட்டுக்கோட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.