இந்த நிலையில்; பி கிரேடாக இருந்த முத்துப்பேட்டை ரயில்வே நிலையத்தை தரம் குறைத்து சி கிரேடாக மாற்ற தென்னக ரயில்வே துறை முயற்சி செய்து வருகிறது. இதன் மூலம் இப்பகுதிக்கு வரும் ரயில்கள் 2 நிமிடங்கள் மட்டுமே நின்று செல்லும் வகையிலும், மேலும் ஸ்டேஷன் மாஸ்டர் இல்லாத ஒரு ரயில்வே நிலையமாக மட்டுமே செயல்படும். இதனால் இப்பகுதி மக்களுக்கும் வியாபாரிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் தொலை தூர பயணம் மேற்கொள்ள பல்வேறு இடற்பாடுகள் மற்றும் வசதிகள் பெற வாய்புகள் இல்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த இப்பகுதி மக்கள் விரைவில் போராட்டம் நடத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று கரூரில் உள்ள அவரது இல்லத்தில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பித்துரையிடம் முத்துப்பேட்டை தர்கா முதன்மை அறங்காவலர் எஸ்.எஸ்.பாக்கர் அலி சாஹிப் தலைமையில் நுகர்வோர் அமைப்பின் கௌரவ தலைவர் சுல்தான் இபுராஹிம், வர்த்தகக்கழக தலைவர் ராஜாராம், கௌரவ தலைவர் திருஞானம், இ.கம்யூனிஸ்ட் ஒன்றிய துணைச் செயலாளர் ராமநாதன், நகர காங்கிரஸ் தலைவர் ஜெகபர்அலி, தர்கா டிரஸ்டிகள் தமிம் அன்சாரி சாஹீப், நூர்முகமது இலக்கிய மன்ற செயலாளர் ராஜ்மோகன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட பொருளாளர் வக்கீல் தீன் முகம்மது, மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் முகம்மது பைசல், ஒன்றிய செயலாளர் நெய்னா நகரச் செயலாளர் ஹமீம், த.மு.மு.க நகர துணைச் செயலாளர் சீமான் மற்றும் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள அனைத்து கட்சி, அனைத்து அமைப்பு பிரதிநிதிகள் தனித்தனியாக முத்துப்பேட்டை ரயில்வே நிலையம் தரம் குறைப்பதை கைவிடக் கோரியும் தரம் உயர்த்தியும், கூடுதலான ரயில் போக்குவரத்து வசதியையும் ஏற்படுத்தி தர ரயில்வே அமைச்சரிடம் வழியுறுத்தும் படி மனு வழங்கினர்.
இந்த மனுவை பெற்றுக் கொண்ட தம்பித்துரை கோரிக்கை குறித்து நிச்சியம் ரயில்வே அமைச்சரை சந்தித்து கோரிக்கை பெற்று தருவேன் என்று உறுதிக் கூறி பேசினார்.
செய்தி மற்றும் படங்கள்:
'நிருபர்' மொய்தீன் பிச்சை,முத்துப்பேட்டை
ஓராண்டில் ஒருகோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவேன் என்றார் மோடி. இன்று ஒரு டிரைவர் கூட இல்லாமல் ரயில் ஓட்டுவோம் என்கிறார்கள். கோடிகளை கொட்டி ரயில் அமைத்து ஒரு டிரைவர் சம்பளத்திலா மிச்சம் காணப் போகிறார்கள் ? இங்கே அதிக நேரம் நிற்பதால் என்ன மூழ்கி போய்விடுகிறது? நாமென்ன டெல்லி போல மெட்ரினோ ரயிலா? அல்லது சென்னைப் போல மெட்ரோ தாருங்கள் என்றா கேட்கிறார்கள்?
ReplyDeleteதேர்தல் நேரத்தில் மக்களின் கோரிக்கை என்னவென்று வேட்பாளருக்கு தெரியும், பிறகு வெற்றிபெற்றவர்க்கு தொகுதி மறக்கப் பட்டு விடும். புதிய வசதிகள் கொடுக்க முடியாவிட்டாலும் இருப்பதை புடுங்காமல் இருந்தால் சரிதான்.
இவர்களின் ஒற்றுமையால் கோரிக்கை நிறைவேறும் எனலாம் - ஒற்றுமையே பலம்!