அதிரையை சேர்ந்தவர் பிரைட் மீரா. பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியில் சொந்தமாக தொழில் நடத்தி வருகிறார். இவருக்கு கிடைக்கும் ஓய்வான நேரத்தில் பயனுள்ள வகையில் பல அறிய புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கி வருகிறார். குறிப்பாக இந்திய தேசத்தின் மீது தான் கொண்டுள்ள அளவில்லா பற்றுதலை பறைசாற்றும் விதமாக ஒவ்வொரு சுதந்திர தினம், குடியரசு தினத்தன்றும் பல கண்டுபிடிப்புகளை தனது சொந்த செலவில் பல்வேறு நுணுக்கங்களோடு தொடர்ந்து உருவாக்கி வருகிறார். இதற்காக தனது வீட்டில் கூடுதலான நேரங்களை ஒதுக்கி ஆர்வத்துடன் செய்து வருகிறார். இவருடைய படைப்புகளை ஏராளமான பள்ளி கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் வியப்புடன் பார்வையிட்டு இவரை பாராட்டிச் செல்கின்றனர். இவரின் படைப்பாற்றலை வியந்த பலர் 'இளம் விஞ்ஞானி' என அன்புடன் அழைக்கப்படுகிறார்.
இவருடைய அசத்தலான கண்டுபிடிப்புகளை பிறர் கண்டு மகிழ்வது இவருக்கும் கூடுதலான உற்சாகத்தை தருகின்றது. இவருடைய தயாரிப்புகளுக்கு அங்கீகாரமாக பல்வேறு தனியார் தொலைக்காட்சிகளும், இணையதளங்களும், பத்திரிக்கைகளும் இவர் உருவாக்கிய பல படைப்புகளை படம்பிடித்து செய்தியாக பரப்பி வருகின்றன. மேலும் தனது நாட்டை நேசிக்கும் பண்பின் காரணமாக 'தேசபற்று மிக்கவர்' என்ற விருதும் பெற்றுள்ளார்.
மறைந்த 'மாமேதை' அப்துல் கலாம் மீது அதிக பற்றுகொண்டுள்ள இவர் சமீபத்திய தனது புதிய கண்டுபிடிப்புக்கு 'அப்துல் கலாம்' பெயரை சூற்றி மகிழ்ந்திருக்கிறார்.
இவர்குறித்து 'களஞ்சியம்' என்ற இதழில் வெளிவந்த நேர்காணல்...
Masha Allah. .........
ReplyDeleteMasha allah
ReplyDeletemasha allah
ReplyDeletemasha allah
ReplyDeleteassalamu alaikkum massha allah good
ReplyDeleteassalamu alaikkum massha allah good
ReplyDelete