அமெரிக்கா கலிபோர்னியா மகாணத்தில் வசித்து வருபவர். அப்துல் ரஹ்மான். இவரது மகன் முஹம்மது ஷைஃபுல்லாஹ் ( வயது 5 ). இவர் தஞ்சை 'நேஷனல் பார்மா' மருந்தக உரிமையாளர் கமால் பாட்சா மற்றும் பிரபல காது மூக்கு தொண்டை நிபுணர் டாக்டர் முஹம்மது அன்வர், மதுரை பிரபல தொழில் அதிபர் முகமது அலி ஆகியோரின் பேரன் ஆவார்.
புனிதமிகு ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்களின் 5 கடமைகளில் ஒன்றாகிய நோன்பு நோற்பது உலகெங்கும் உள்ள இஸ்லாமியர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சிறுவன் முஹம்மது ஷைஃபுல்லாஹ் புனிதமிகு ரமலான் மாதம் 30 நாட்களிலும் உற்சாகத்துடன் நோன்பு நோற்று வருகிறார். 30 நோன்புகளை எட்டுவதற்கு இன்னும் இரண்டு தினங்களே உள்ள நிலையில் கலிபோர்னியா மகாணம் சிலிக்கன் வேலி சான்ட்ட கிளாரா எம்சிஏ பள்ளியில் நேற்று நடந்த இஃப்தார் எனும் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமது உறவினர்களோடு கலந்துகொண்டார்.
இந்நிகழ்ச்சியில் கலிபோர்னியா வாழ் அதிரையர்கள் எம்.எம்.எஸ் பகுருதீன், எம்.எம்.எஸ் சிராஜுதீன், சேக்தாவூது, அபூபக்கர், முஸ்தபா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான தமிழ் இஸ்லாமியர்கள் கலந்துகொண்டு சிறுவனின் ஆர்வத்தை பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.







அமெரிக்காவில் 30 நோன்பு நோற்கும் 5 வயது தமிழ்ச் சிறுவன் !
ReplyDeleteI felt, Heading should be 5 years old
Muslim boy doing 30 days fasting in America. Not a Thamil chiruvan.
It's Looks like feeling Hindu boy
Why we worries to mention our religion?
KALEELURRAHMAN
IRVING TX
kuthumal@gmail.come