தஞ்சை மாவட்டம், அதிரை ஈத்கமிட்டி சார்பில் பெருநாள் திடல் தொழுகை காட்டுப்பள்ளி தர்ஹா அருகே கிழக்கு பகுதியின் அமைந்துள்ள மைதானத்தில் இன்று காலை 7.30 மணிக்கு நடைபெற்றது. இதில் இஸ்லாமிய மார்க்க அழைப்பாளர் அப்துல்லாஹ் தவ்ஹீத் கலந்துகொண்டு குத்பா உரை நிகழ்த்தினார். தொழுகையை ஹாபிழ் அப்துல் பத்தாஹ் நடத்தினர்.
அதிரையில் வசிக்கும் அனைத்து பகுதியில் உள்ள பெரும்பாலான ஆண்கள், பெண்கள் பெரும்திரளாக தொழுகையில் கலந்துகொண்டு சிறப்பித்தனர். திடலில் பெண்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதில் 7 பேர் இஸ்லாம் மார்க்கத்தை தனது வாழ்வின் நெறிமுறையாக ஏற்றுக்கொண்டார்கள். அவர்களுக்கு புனித திருக்குர்ஆன் அன்பளிப்பு செய்யப்பட்டது.















இந்த அறிமுகம் தேவை இல்லாத ஒன்று என எனக்கு தோன்றுகிறது
ReplyDelete