தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள கண்டியூரில் புதன்கிழமை மாலை ஏற்பட்ட தீ விபத்தில் ஏறத்தாழ 75 வீடுகள் சேதமடைந்தன. இந்தச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
கண்டியூர் - திருக்காட்டுப்பள்ளி சாலையில் உள்ள தர்கா தோப்பில் 80-க்கும் அதிகமான கூரை வீடுகள் உள்ளன. இந்தப் பகுதியில் வசித்து வரும் சம்சுதீன் வீட்டை பூட்டிவிட்டு வெளியூர் சென்றார். இவரது வீட்டுக் கூரையில் புதன்கிழமை மாலை தீ பற்றி எரிந்தது. அப்போது, காற்று வேகமாக வீசியதால் அடுத்தடுத்து உள்ள வீடுகளிலும் தீ பரவியது. பல்வேறு வீடுகளில் இருந்த கிட்டத்தட்ட 10 சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இதன் காரணமாகவும், காற்றின் வேகத்தாலும் அப்பகுதியில் உள்ள ஏறத்தாழ 75 கூரை வீடுகளில் தீ பற்றி எரிந்தது.
இந்த விபத்தில் பலத்தக் காயமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த எஸ். ஷேக் அலாவுதீன் (45) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மாற்றுத் திறனாளியான இவர் தப்பியோட முடியாமல் தீயில் கருகி இறந்துள்ளார்.
மேலும், பலத்தக் காயமடைந்த இருவர் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தச் சம்பவத்தில் வீடுகளைச் சுற்றியுள்ள தென்னை மரங்களிலும் தீ பற்றியதால் ஒவ்வொன்றாக எரிந்து சாய்ந்து விழுந்தன. மேலும் 25-க்கும் அதிகமான மரங்கள் கருகிவிட்டன.
தகவலறிந்த திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி, தஞ்சாவூர், விமானப் படை நிலையம் ஆகிய தீயணைப்பு நிலையங்களிலிருந்து 8 தீணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டன. என்றாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் அணைப்பதில் சிரமம் நிலவியது. எனவே, இரவிலும் தீயணைக்கும் பணி தொடர்ந்தது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஆர். சுதாகர், மாவட்ட வருவாய் அலுவலர் பெ. சந்திரசேகரன், தஞ்சாவூர் கோட்டாட்சியர் த.ப. ஜெய்பீம் உள்ளிட்ட அலுவலர்கள் சம்பவ இடத்துக்குச் சென்று மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தினர்.
நன்றி: தினமணி

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.