.

Pages

Monday, October 26, 2015

புறக்கணிக்கப்படும் 17 மற்றும் 19 வது வார்டுகளின் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சியரகத்தில் அதிரை மமகவினர் !

அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 17 மற்றும் 19 வது வார்டுகளின் கோரிக்கைகளை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக கூறி அதிரை பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கடந்த [ 15-06-2015 ] அன்று அதிரை பேரூராட்சி அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அப்போது பேரூராட்சி அலுவலக தரப்பில் கோரிக்கைகள் நிறைவேற்ற முயற்சிக்கப்படும் என கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் கோரிக்கைகள் தொடர்ந்து புறக்கணிப்படுவதாகவும், கடந்த 4 ஆண்டுகளில் வார்டுகளின் அடிப்படை வசதிகள் எதுவும் செய்துகொடுக்க வில்லை எனவும், அரசியல் காரணங்களால் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதாகவும், வார்டுகளில் அடிப்படை வசதிகளை உடனடியாக நிறைவேற்றி தர வலியுறுத்தி இன்று காலை தஞ்சை மாவட்ட ஆட்சியர் மக்கள் குறைதீர்ப்பு நாளில் மனிதநேய மக்கள் கட்சியின் 17 வது வார்டு கவுன்சிலர் சகோதரி ரபீக்கா முஹம்மது சலீம்  மற்றும் 19 வது கவுன்சிலர் சகோதரி செளதா அஹமது ஹாஜா ஆகியோர் தனித்தனியே எழுதிய கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சியரகத்தில் நேரிடையாக சென்று வழங்கினார்கள்.

மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் பெ. சந்திரசேகரன் சம்பந்தப்பட்ட துறையினரை உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். கோரிக்கை மனுக்கள் அளித்த போது தமுமுக - மமக அதிரை நகர நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

அதிரை பேரூராட்சி 17 வது வார்டு கவுன்சிலர் சகோதரி ரபீக்கா முஹம்மது சலீம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
அதிரை பேரூராட்சி 19 வது வார்டு கவுன்சிலர் சகோதரி செளதா அஹமது ஹாஜா அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

2 comments:

  1. மிகவும் தாமதமாக எடுத்த முடிவு இதை முன்பே செய்துயிருக்கவேண்டும்.இது தாமதமானது எனவே வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. மிகவும் தாமதமாக எடுத்த முடிவு இதை முன்பே செய்துயிருக்கவேண்டும்.இது தாமதமானது எனவே வாழ்த்துக்கள்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.