.

Pages

Saturday, October 17, 2015

அதிரை WSC நடத்திய மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டி !

அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் [ WSC ] சார்பாக 15 ஆம் ஆண்டு மாநில அளவில் நடத்தும் மாபெரும் மின்னொளி கைப்பந்து தொடர் போட்டியின் முதல் நாள் ஆட்ட நிகழ்ச்சி மேலத்தெரு மைதானத்தில் இன்று சிறப்பாக தொடங்கியது.

துவக்க விழாவில் சிறப்பு விருந்தினராக 'சமூக ஆர்வலர்' அப்துல் ஹலீம் கலந்துகொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து முதல் ஆட்டத்தை துவக்கி வைத்தார். மேலும் சிறப்பு அழைப்பாளர்களாக காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் திரு. ராமச்சந்திரன், WSC முன்னாள் வீரர் ஜியாவுதீன், முஹம்மது சுல்தான், மல்ஹர்தீன், ஜாஃபர் அலி, ஜாஹிர் உசேன், அன்வர், புரோஸ்கான், ஹலீம் ஆகியோர் கலந்துகொண்டு வீரர்களுக்கு கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

இன்றைய முதல் ஆட்டத்தில் அதிரை ESC அணி, மேற்பனைக்காடு அணியும் மோதினார்கள். இரு அணிகளும் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் அல்லர் என்பது போல் சிறப்பாக ஆடினார். விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்ட இறுதியில் அணி வெற்றி பெற்றது. ஆட்டத்தின் பிரதான நடுவராக சாலிஹு, இவருக்கு உதவியாக உதயா ஆகியோர் இருந்தனர். விழா ஏற்பாடுகளை அதிரை வெஸ்டர்ன் ஸ்போர்ட்ஸ் கிளப் சிறப்பாக செய்து இருந்தது.

மின்னொளியில் இரவு நேர ஆட்டமாக இரண்டு நாட்களுக்கு நடைபெற இருக்கின்ற போட்டிகளில் பல்வேறு ஊர்களைச் சார்ந்த தலைசிறந்த அணிகள் விளையாடஆட உள்ளனர். நாளை நடைபெற உள்ள இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் மற்றும் மூன்றாம் பரிசுகளை அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் வழங்க இருக்கிறார். பரிசளிப்பு நிகழ்ச்சி நாளை நடைபெற இருக்கிறது. இதில் மஹல்லா நிர்வாகிகள் மற்றும் ஏராளமான சிறப்பு அழைப்பாளர்கள் கலந்துகொள்ள இருக்கிறார்கள்.

செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.