.

Pages

Friday, October 23, 2015

அதிரை அரசு மருத்துவமனையில் சிறுவர்களுக்கு இலவச ஹத்னா அறுவை சிகிச்சை !

அதிரை அரசு மருத்துவமனையில் இஸ்லாமிய சிறுவர்களுக்கு இலவச ஹத்னா அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. ஏழை எளிய சிறுவர்கள் பயன்பெரும் வகையில் ஹத்னா அறுவை சிகிச்சை மேற்கொள்ள எதிர்வரும் அரையாண்டு தேர்வு விடுமுறை அல்லது பள்ளி விடுமுறை தினங்களை பயன்படுத்திக்கொள்ள பொதுமக்களை அறிவுறுத்த இருப்பதாக கூறப்படுகிறது. இந்த பணிக்கு அதிரை பொதுமக்கள் பலரும் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இதுதொடர்பாக அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் நம்மிடம் கூறியதாவது...
அதிரை வரலாற்றில் முதன் முறையாக அதிரை அரசு மருத்துவமனையில் இஸ்லாமிய சிறுவர்களுக்கான ஹத்னா அறுவை சிகிச்சையை இஸ்லாமிய அரசு மருத்துவர்களால் மேற்கொள்ள இருக்கின்றது. குறிப்பாக பள்ளி விடுமுறை தினங்களில் ஹத்னா அறுவை சிகிச்சை நடத்தப்படும். இந்த வாய்ப்பை அதிரை மற்றும் அதிரை சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த சிறுவர்கள் பயன்படுத்த முன்வரவேண்டும். தகுதி வாய்ந்த அரசு மருத்துவ அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் அங்கீகாரம் பெற்ற குளோரபார்மிஸ்ட் மூலம் அறுவை சிகிச்சை நடைபெற இருப்பதாக அரசு மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் அதிரையில் செயல்படும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் அரசு மருத்துவமனையில் மேற்கொள்ளப்படும் இலவச ஹத்னா அறுவை சிகிச்சையை ஏழை எளிய சிறுவர்கள் பயன்படுத்தும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். இந்த தகவலை அனைவரிடத்திலும் எடுத்துச்செல்ல வேண்டும்.

மேலதிக தகவல் மற்றும் முன்பதிவு தொடர்புக்கு இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிரை சேர்மன் 'மரைக்கா' இத்ரீஸ் அஹமது அவர்களை 9944499366 என்ற அலைப்பேசியில் தொடர்பு கொள்ளவும்' என்றார்.

4 comments:

  1. அஸ்ஸலாமு அலைக்கும் சேர்மன் அவர்களே குளத்துக்கு தண்ணீர் கொண்டு வந்தீர்கள். அரசு மருத்துவமனைக்கு டாக்டர் கொண்டுவந்தீர்கள், ஆனால் சில தெருக்களில் தெருவிளக்கே பல வருடங்களாக பொருத்தப்படாமல் உள்ள இடங்களில் ( ஹாஜா நகர், ஜாவியா ரோடு, மேலத்தெரு இன்னும் பல) இதுவரை தெருவிளக்கு புதிதாக பொருத்தப்படாமல் பொதுமக்கள் சிரமப்படுகிறார்கள். இதை உங்களிடம் வாய்வழி செய்தியாக சொன்னால் கடிதமாக‌ தாருங்கள் என்றீர், கடிதமும் கொடுத்தோம், அதுக்கு நொ ரெஸ்பான்ஸ், நேரடியா கேட்டால் நீ எந்த வார்டு என்று கேக்குறீர்கள், இல்லாவிடில் உங்கள் வார்டு மெம்பரிடம் சொல் என கூறுகிறீர், சரி உங்களுக்கு ஒரு கேள்வி, எங்க வார்டு மெம்பரு உங்களுக்கு ஓட்டு போட்டு ஜைக்க வைத்தார்களா? , அல்லது நாங்கள் ஓட்டு போட்டு உங்களை ஜைக்க வைத்தோமா? பொது நலனுக்கு தானே இதுலாம் செய்ய சொல்லுரோம். எங்க வீட்டு வாசலுக்கா விளக்கு போட சொல்லுரோம். நீங்கள் என்னா செய்தாலும் இரவு நேரத்தில் தெரு வெளிச்சமாக இருந்தால்தான் உங்கள் பெயர் நிலைக்கும். இரவில் எத்தனைப்பேர் இருட்டில் கீழே விழுந்து வீட்டில் முடங்கி கிடக்கிறார்கள் தெரியுமா? அல்லாஹ்தான் உங்களுக்கு நல்ல புத்தியை கொடுக்கனும்.

    ReplyDelete
  2. ஒரே குறை சொலிக்கொண்டு இருந்தால் எப்படி கமெண்டை படிக்கும் நாங்கள் என்ன முட்டாளா ?
    நீ சரியான ஆம்பிளையாக இருந்தால் நேரில் போய்
    சேர்மனை பார் நீ வெளி நாடு வாசியாக இருந்தால் .உங்க வாப்பா உம்மாவை அனுப்பி விசாரி அதை விட்டுவிட்டு பொன்னதனமாய் இப்படி கட்டுரை தேவையா ?

    ReplyDelete
  3. Alhamthulillah poor people can use this without fail.

    ReplyDelete
  4. Alhamthulillah poor people can use this without fail.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.