.

Pages

Wednesday, October 21, 2015

பிளாஸ்டிக் பயண்பாடு பற்றிய விழிப்புணர்வு கூட்டம் !

பட்டுக்கோட்டை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பயண்பாடு விழிப்புணர்வு கூட்டம் நகராட்சியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் ஜவகர்பாபு தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையர் அச்சையா முன்னிலை வகித்தார். நகராட்சி துப்புரவு அலுவலர் மூர்த்தி மற்றும் நகர வர்த்தகர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களிடம் பிளாஸ்டிக் பையினால் ஏற்படும் விளைவுகள் பற்றி விளக்கப்பட்டது. எதிர்கால சந்ததிகளின் வாழ்வாதாரம் முழுக்க பாதிக்கப்படும் அபாயம் பற்றி விளக்கப்பட்டது. இந்த பிளாஸ்டிக் பைகள் மக்காமல் பூமியில் புதைந்து மழைநீர் புமிக்கடியில் செல்லாமல் தடுத்து நீர் ஆதாரம் முற்றிலும் அழியும் ஆபத்துக்கள் பற்றி விளக்கப்பட்டு, 40 மைக்ரான் அளவுள்ள கேரிப்பை பயண்படுத்தினால் அந்த வகை பிளாஸ்டிக் எதிர்காலத்தில் மக்கிப்போகும் தன்மை உள்ளது என்றும், 40 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் பைகளை எந்த கடை உரிமையாளரும் தனது வாடிக்கையாளர்களுக்கு வழங்க கூடாது என்றும், மீறும் கடைகளுக்கு அபராதம் விதித்து கடைக்க சீல் வைக்கும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என் வர்த்தகர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

செய்தி மற்றும் படம்:
நிருபர் ராஜா,
பட்டுக்கோட்டை

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.