.

Pages

Monday, October 26, 2015

அதிரையில் கடல் உயிரி தாக்கி 5 மீனவர்கள் பாதிப்பு !

தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் உள்ளடக்கிய காந்தி நகர், கரையூர் தெரு, ஏரிப்புறக்கரை மறவக்காடு, கீழத்தோட்டம் ஆகிய பகுதிகளில் மீன்பிடி துறைமுகங்கள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் படகுகளில் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

இந்தநிலையில் மீனவர்களால் சொறி என அழைக்கப்படும் ஒரு வகை கடல் வாழ் உயிரினம் மீனவர்களை தாக்கியது. இதில் அதிராம்பட்டினம் கரையூர் தெருவை சேர்ந்த நாகூர் பிச்சை, மாரிமுத்தான், சுப்பிரமணியன், சேகர், தரகர் தெருவை சேர்ந்த சேக் அப்துல்லா ஆகியோர் பாதிப்படைந்தனர். இதனால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் அச்சமடைந்து உள்ளனர்.

இதுகுறித்து கடல் சொறி தாக்கியதில் பாதிப்படைந்த மீனவர் நாகூர் பிச்சை கூறுகையில்,
சொறி என அழைக்கப்படும் ஒரு வகை கடல் வாழ் உயிரினம் கடலின் ஆழப்பகுதிகளில் வசிப்பவை. குறிப்பாக நாகப்பட்டினம், காரைக்கால் கடல் பகுதிகளில் அதிகளவில் காணப்படும். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கடல் சொறி தென்படுகிறது. இவை கடலின் ஆழப்பகுதியில் மீன் பிடிக்கும் போது மீனவர்களின் வலைகளில் ஒட்டிக்கொள்கின்றன. பின்னர் வலையை மடிக்கும் போது மீனவர்களின் கை, கால்களை சொறி தாக்குகின்றன. இதனால் உடலில் ஒருவித அதிர்ச்சி ஏற்பட்டு, இருதயம் அடைப்பு ஏற்படுகிறது. உடல் சோர்வடைகிறது.

அதிராம்பட்டினம் கடல் பகுதியில் கடந்த ஒரு வார காலத்தில் 5 மீனவர்களை கடல் சொறி தாக்கியுள்ளது. இதனால் கடலுக்கு செல்லும் மீனவர்கள் அச்சமடைந்து உள்ளனர். கடல் சொறியின் தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள தமிழக அரசு மீனவர்களுக்கு கைகள் மற்றும் கால்களில் அணிந்துகொள்ள உறை வழங்கவேண்டும். மேலும் சொறி தாக்குதலுக்கு உள்ளான மீனவர்களுக்கு அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவ சிகிச்சை வழங்க ஏற்பாடு செய்யவேண்டும்' என்றார். 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.