நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியை தலைமை அருட்சகோதரி சிறிய புஸ்பம் வகித்தார். பள்ளி தாளாளர் அருட்சகோதரி செபஸ்த்தியம்மாள் முன்னிலை வகித்தார்.
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர் கே. செய்யது அஹமது கபீர் மறைந்த மாமேதை டாக்டர். ஏ.பி.ஜெ. அப்துல்கலாம் குறித்து எழுச்சியுரை நிகழ்த்தினார். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த உரை பள்ளி மாணவிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. சிறப்பு விருந்தினராக இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி அதிராம்பட்டினம் சேர்மன் மரைக்கா கே. இத்ரீஸ் அஹமது கலந்துகொண்டு மாணவிகள் நடத்திய கலை நிகழ்ச்சிகளை வெகுவாக பாராட்டினார்.
முன்னதாக வரவேற்புரை பள்ளி ஆசிரியை விண்ணரசி நிகழ்த்தினார். விழா முடிவில் பள்ளி ஆசிரியை திருமதி மோகனம்பாள் நன்றி கூறினார். நிகழ்ச்சிகள் அனைத்தையும் பள்ளி ஆசிரியை திருமதி லூசியா தொகுத்து வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவிகள் நடத்திய விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. இதில் 2200 க்கும் மேற்பட்ட பள்ளி மாணவிகள் கலந்துகொண்டனர்.
நாட்டை வலுவாக்க வேண்டும் என கலாம் கனவு கண்டார், அவரது கடைசி நிமிடம் வரை மாணவர்களுடன் கலந்து உரையாடி வந்தார் . அவரது புகழ் என்றும் நிலைத்து நிற்கும் . அவரது வாழக்கை நமக்கெல்லாம் ஒரு பாடமாக திகழும். இளையசமுதாயத்தினர், இளம் விஞ்ஞானிகள் கலாம் கொள்கையை பின்பற்றி வாழ வேண்டும் .நாட்டின் பெருமையை உலக அளவில் உயர்த்தி காட்டினார் . கலாம் போல் உறுதி ஏற்று நாம் எல்லோரும் வாழ வேண்டும்.
ReplyDelete