அதிரை பேரூராட்சியின் பொது நிதி மற்றும் தஞ்சையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ் பழனிமாணிக்கத்தின் 'தொகுதி மேம்பாடு நிதி' ஆகியவற்றிலிருந்து அதிரை பேருந்து நிலைய பகுதியில் வர்த்தக கட்டிடங்கள் மற்றும் மேற்கூரை கட்டி முடிக்கப்பட்டன.
இந்தநிலையில் பெரும்பாலான பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து பேருந்து நிலையம் திறப்பதற்கான பணிகளில் அதிரை பேரூராட்சி நிர்வாகம் மும்முரமாக ஈடுபட்டது. பேருந்து நிலைய பகுதியில் தனியாருக்கு சொந்தமான சுமார் 20 முதல் 30 வரை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் பேருந்து நிலையத்திற்கு வருகை தரும் பயணிகள், பொதுமக்கள் மற்றும் அரசு பேருந்துகளுக்கு இடையூறு ஏற்படுவதாக கூறி முதற்கட்டமாக பேருந்து நிலைய மைய பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தனியார் வாகனங்களை அப்புறப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக இறங்கியது.
இதுதொடர்பாக பேரூராட்சி நிர்வாகத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகாரின் பேரில் தனியார் வாகன ஓட்டுனர்களிடம் அரசு அலுவலர்கள் நேரடி பேச்சு வார்த்தை நடத்தினர். தனியார் வாகனங்களை நிறுத்துவதற்கு அதிரை பேரூராட்சி சார்பில் மாற்று இடமாக அதிரை ஈசிஆர் சாலையில் அமைந்துள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் விளையாட்டு மைதானம் வடக்கு பகுதியை ஒட்டி அமைந்துள்ள கிழமேல் பகுதியை பயன்படுத்திக்கொள்ள இருதரப்பும் ஏற்றுக்கொண்டது. இதைதொடர்ந்து அதிரை பேரூராட்சி பொது நிதி ₹ 9.60 லட்சம் மதிப்பீட்டில் சுமார் 60 மீட்டர் நீளம் கொண்ட பகுதியில் மூடியுடன் கூடிய வடிகால் வாய்க்கால் கட்டி முடிக்கப்பட்டன.
இந்த நிலையில் இந்த பகுதியில் வசிக்கும் முத்தம்மாள் தெருகிராம மக்கள், பள்ளி கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்றும், இந்த பகுதியில் டாக்ஸி ஸ்டாண்ட் அமைப்பதை உடனே நிறுத்தக்கோரி அதிரை ஈசிஆர் சாலையில் மறியல் போராட்டத்தை நடத்தினார்கள். இதையடுத்து இந்த பகுதியில் தனியார் வாகனங்கள் நிறுத்தி வைக்கும் முயற்சி கைவிடப்பட்டது.
இந்தநிலையில் அதிரை பேருந்து நிலையம் கட்டி முடித்து பல மாதங்களாகியும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு இன்னும் திறக்கப்படாமல் இருந்தது. பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேருந்து நிலையத்தை உடனடியாக திறந்து விட வேண்டும் என்ற தீவிர முயற்சியில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் ஈடுபட்டார்.
இதுதொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் மனு தக்கால் செய்தார். இதில் பேருந்து நிலையப்பகுதியின் ஆக்கிரமிப்பில் உள்ள தனியார் வாகனங்களை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட துறையினருக்கு உத்தரவிடுமாறு கேட்டுக்கொண்டார். இவரது மனுவை விசாரித்த மதுரை ஐகோர்ட் நீதிபதி ஆர் சுந்தர், நீதிபதி வி.எம் வேலுமணி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் அதிரை பேருந்து நிலையத்தின் வாகன ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்குமாறு தஞ்சை மாவட்ட ஆட்சியர், பட்டுக்கோட்டை கோட்டாட்சியர், பட்டுக்கோட்டை தாசில்தார், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், அதிரை காவல் நிலைய ஆய்வாளர், பேரூராட்சி செயல் அலுவலர் ஆகியோருக்கு உத்தரவு பிறப்பித்தனர். மதுரை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்ததையடுத்து இன்னும் சில தினங்களில் பேருந்து நிலையத்தின் ஆக்கிரமிப்பில் உள்ள தனியார் வாகனங்கள் அகற்றும் பணி அதிரடியாக நடைபெறும் என கூறப்படுகிறது.
இதன் பிறகு பேருந்து நிலையத்தின் இறுதி கட்ட பணிகள் நடைபெரும் எனவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக புதிய பேருந்து நிலையம் திறக்கப்படும் எனவும் கூறப்படுகிறது. இதனால் அதிரை மற்றும் சுற்றுவட்டார பொதுமக்களின் நீண்ட நாள் கனவு விரைவில் நிறைவேற இருப்பதாக கூறப்படுகிறது.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.