.

Pages

Sunday, October 25, 2015

நாம் தமிழர் கட்சி பொதுக்கூட்டத்தில் அதிரையர் பங்கேற்பு !

பட்டுக்கோட்டையில் நாம் தமிழர் கட்சியின் சார்பில் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு வழக்கறிஞர் நல்லதுரை தலைமை வகித்தார். நாம் தமிழர் கட்சி செல்லத்துரை, அதிரை அமீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார். நாம் தமிழர் கட்சியின் தலைமை கழக பேச்சாளர் திலீபன் பேசினார்.

கூட்டத்தில் அதிரை அமீன் தலைமையில் அதிரையிலிருந்து ஏராளமானோர் கலந்துகொண்டனர். மேலும் பல்வேறு பகுதியிலிருந்து வருகை தந்த ஏராளமானோர் சீமான் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியில் இணைந்தனர்.
 
 
 

3 comments:

  1. ஒரு சிலருக்கு இந்த கட்சி எத்தனை நாளைக்கு என்று தெரியவில்லை. பதவிபோன அடுத்த கணமே கட்சி மாறிவிடும் பட்சிகள்

    ReplyDelete
  2. சீமான்; தேசிய ஒருமைப்பாட்டுக்கு எதிராக பிரிவினை வாதிகளுடன் கைகோர்ப்பது, அதிமேதாவித்தனமாக தான்தோன்றி மற்ற கட்சிகளை விமர்சிப்பது, தான் சார்ந்த சாதி பத்திரிகை மற்றும் டிவி ராஜபக்சாவின் பேட்டியை ஒளிபரப்பிய போதும் அதை எதிர்க்காமல் மும்பை போய் சல்மான்கான் வீட்டை முற்றுக்கை இட்டது, தாதுமணல் கொள்ளையன் வைகுண்டரசனுடன் தொடர்பு போன்ற சில்லறை வேலைகளால் இன்று சீமான் தனிமைபடுத்தப்பட்டுள்ளார். மத்தியில் ஆட்சி மாறிவிட்டது (பாஜாக ) இப்போதும் தமிழக மீனவர்கள் தாக்கபடுவதும்; ஆட்சியில் ஊழலும் தொடர்வது பற்றி பேசாமல் இருப்பதால் இவரு ஒரு செல்லாக் காசு.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.