இந்தநிலையில் மேலத்தெரு நீர் தேக்க தொட்டிக்கு வரும் நேரடி இணைப்பிலிருந்து முறைகேடாக குடிநீர் இணைப்பு பெற்றுள்ளதாகவும், இவற்றை தாமாக முன்வந்து இணைப்பை துண்டிப்பு செய்ய வேண்டும் என அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாளிதழில் பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது. மேலும் இணைப்பை துண்டித்து கொள்ள கால அவகாசமும் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் கால அவகாசம் முடிவுற்ற நிலையில் இன்று அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் தலைமையில் பேரூராட்சி ஊழியர்கள் மேலத்தெரு நீர்தேக்க தொட்டி அருகே அனுமதியின்றி பெறப்பட்டுள்ள இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். அப்பொழுது ஒரு தரப்பினர் இது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதாகவும், வழக்கின் தீர்ப்பு வெளிவரும் வரை குடிநீர் இணைப்பை துண்டிக்க வேண்டாம் என தடுத்து நிறுத்தியதாக கூறப்படுகிறது.
இதில் இருதரப்பினரிடேயே ஏற்பட்ட வாய் தகராறில் அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் முனியசாமியின் சட்டை கிழிக்கப்பட்டதாகவும், பேரூராட்சி கைபம்பு பராமரிப்பாளர் பாலுசாமி தாக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. காயமடைந்த பாலுசாமி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பாக அதிரை பேரூராட்சி நிர்வாகம் சார்பில் காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டதாகவும், மேலும் அதிரை பேரூராட்சி செயல் அலுவலர் ஊழியர்கள் சார்பில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று புகார் அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்த சம்பவத்தால் இன்று நடைபெற இருந்த பேரூராட்சி மன்றக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக பேரூராட்சி அலுவலகத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அதிரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள்ளது.
இந்ததண்ணீர் திருட்டு ஊர் அறிந்த விசியம் மதுரை ஹைகோர்டும் திருப்பு வழங்கி விட்டது மீண்டும் பிடி வாதம் பிடித்தால் அந்த தெரு ஜமாஅத் என்னாச்சு இத்தளம் விட்ட நான் அந்த தௌஹித் இந்த தௌஹித் என்னாச் தனக்கு தனக்கு என்றால் எல்லா அயோக்கியனும் மார்க்கத்தை அடகு வைத்து விடுவான் என்பதுக்கு இது ஒன்ட் போதும் தேவை இல்லத்துக்கு ஸ்டிக்கு பண்ணுவான்
ReplyDeleteAssalamu Alaikkum
ReplyDeleteIf there is an illegal water connection as identified and proved then its wrong whoever did, as it is affecting the common public.
I wish there any kind of conflicts amicably resolved by sitting and speech among concerned parties and officials there.
May Allah save us from any disaster there.
Jazakkallah khair,
B. Ahamed Ameen from Dubai.
konjam tamilley sollunga Mr Ameen bhai engea ellarukkum english theriyathu bhai .....tamil plz
ReplyDeletekonjam tamilley sollunga Mr Ameen bhai engea ellarukkum english theriyathu bhai .....tamil plz
ReplyDeleteAmeen post only for English knows peoples ,,,, if you want read Tamil, you can read rest of them thank you
Deleteநீண்டகாலமாக தண்ணீர் திருட்டு இருந்த சம்பவம் இப்போ வெளியில் வந்துள்ளது, தாக்கப்பட்ட அரசு ஊழியரின் பெயர் குறுப்பிடப்பட்டுள்ள போதிலும் தாக்கியவர்களின் பெயர் இல்லை என்றால் அவர்கள் அரசியல் பின்புலம் உள்ளவர்கள். இது தொடர்பாக மர்ஹூம் கமருதீன் அவர்கள் வழக்குபோட்ட சம்பவம் மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
ReplyDeleteகாமராஜர் முதலமைச்சராக இருந்த போது அலுவலகத்திற்கு காரில் செல்லாமல் ரிக்சாவில் சென்றாராம் எளிமைக்கு இலக்கணம் வகுத்தவரின் பெயரில் அரசியல் நடத்திக் கொண்டு ஆடம்பரத்தில் கட்சிக்காரர்கள் இருக்கிறார்கள்; பொதுப் பணம் என்பது அது நெருப்பைப் போன்றவை என்று சொன்னவரின் பெயரில் அரசியல் நடத்துபவர்கள் இப்படி செய்யலாமா? சத்தியமூத்தி பவனில் தான் அடிக்கடி வேஷ்டி - சட்டை கிழிப்பு சம்பவம் நடக்கும் இப்போ அதே பாணியில்..ஏழைகள் - நடுத்தர மக்கள் தண்ணீர் பில் கட்டும்போது இவர்களுக்கு மட்டும் என்ன வந்தது. ஆட்சி மாறினா காட்சி மாறனும்க.
யார் அந்த புண்ணியவான்கள்?
ReplyDeleteதண்ணீர் பட்டபாடு என்பது இதுதானா?
தமிழ்லதானே நியூஸ் படிச்சிய...
ReplyDeleteதமிழிலேயே கருத்து சொல்லலாமே..
அன்று யாரு யாரோ ஆண்டாங்க! ஒன்னும் புரியலே, இப்போ யாரு யாரோ வாயை திறக்கிறாங்க!! ஒன்னும் புரியலே,, ஆனா!!! நாளுக்கு நாள் கட்சிகள் வேறு முளைக்குது,,, பணம் சம்பாதிக்க துடிக்குது!!!! ஆனா ஏமாந்த தலைகள் யாரும் உண்டோ என்று தேடுது!? ஆனா, இரவில் மட்டும் கிராணி கடைக்கு அருகில் உள்ள உள்ளே இடத்தில் இடியாப்பம் கோழி பிரட்டல், ஈரல் வறுவல் இதுக்கு குறைச்சலே இல்லே. இது மக்களின் காசுகளில் தானாம்.
ReplyDeleteஅடுத்தவன் சொத்தே அபரிகரிக்கிறான், அடுத்தன் பணத்தை ஆட்டை போடுகிறான், அடுத்தவன் பொண்டாட்டியை குறி வைக்கிறான், நாளைக்கு உன் பொண்டாட்டியை குறிவைப்பான், நாளை மறுநாள் உன் சொத்து அபகரிப்படும். அந்த எம் ஜி ஆர் காலந்தொட்டு மேலத்தெருவில் தண்ணீர் அபகரிப்பட்டு வருது. இதை பல குடும்பங்கள் வெறுங் குடத்தோடு வேடிக்கை பார்க்குது.
தவறை சரி செய்ய போனா சட்டை கிழியுது, வெற்று அதிகாரம் உச்சிக்கு ஏறுது, காரணமுள்ள அதிகாரம் பின் வாங்குது, என்ன நடக்குது இங்கே. நாளைக்கு மறுமையில் மஹ்ஷர் மைதானம் என்று இருக்குதே, இங்கு தண்ணியை திருடினா நாளைக்கு அங்கு தண்ணி கிடைக்காதே, பயம் இல்லையோ. இனியாவது திருந்த பாருங்க. மக்களின் வயிறு எரிச்சல் கூடாதுப்பா.
தன்னுடைய வீட்டுக்கு இலவசமாக குடிநீர் இணைப்பு வழங்கிய அதிகாரியை கண்டித்து அந்த இணைப்பை உடணடியாக துண்டிக்க செய்த காமராஜரை தாங்கள் சார்ந்து இருக்கும் கட்சி கொடியில் போட்டு கொண்டு இவர்கள் செய்யும் காரியம் காமராஜருக்கு செய்யும் அவமரியாதை
ReplyDelete-உமர்
//காமராஜரைகட்சிகொடியில்போட்டுகொண்டுஇவர்கள் செய்யும் காரியம் காமராஜருக்கு செய்யும்அவமரியாதை// [அதிரைவாய்ஸ்சொன்னத ] காமராஜருண்டா யாருங்கோ?
ReplyDelete//தன்வீட்டுக்குஇலவசதண்ணீர்கொடுத்தவரைகண்டித்து இணைப்பை துண்டிக்க செய்தவர்அன்றையகாமராஜர்! // ...இலவசஇணைப்பைதுண்டிக்கவந்தால் தலையை துண்டிப்பார் இன்றைய காமராஜர்கள் .தண்ணீர் போனால் போகட்டும். அதிகாரிகளேஉங்கள் சட்டையை காப்பாத்துங்கள்..
ReplyDelete