.

Pages

Thursday, October 22, 2015

அதிரையில் மரக்கன்றுகள் நடும் பணியில் தன்னார்வலர்கள் !

அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பசுமையை வலியுறுத்தி மரக்கன்றுகள் நடும் பணியில் அதிரையை சேர்ந்த சுமுக தன்னார்வலர்கள் இணைந்து கடந்த சில மாதங்களாக மரக்கன்றுகள் நடும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அதிரையின் அனைத்து பகுதியிலும் குறிப்பாக நடுத்தெரு, புதுமனைத்தெரு, சிஎம்பி லேன், ஆலடித்தெரு, கடற்கரைத்தெரு, ஈசிஆர் சாலை, மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இதுவரையில் 326 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மரக்கன்றுகளை ஆடு, மாடுகளிடமிருந்து பாதுகாக்கும் பொருட்டு மரக்கன்றை சுற்றி கூண்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த திட்டத்தை அதிரையின் பிற பகுதிகளிலும் குறிப்பாக மேலத்தெரு, கீழத்தெரு, பிலால் நகர், ஆதம் நகர், நெசவுத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுத்த இருப்பதாக ஏற்பாட்டாளர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரக்கன்றுகள் நடும் பணி குறித்து அதிரை சுகாதார முன்னேற்ற கழகத்தின் முன்னோடி அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் நம்மிடம் கூறியதாவது...
'அதிரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பசுமையை ஏற்படுத்தும் முயற்சியாக பல்வேறு பகுதிகளில் 1000 மரக்கன்றுகள் நடுதல், நீர் நிலைகளை அதிகப்படுத்துதல், குடியிருப்பு பகுதியில் காணப்படும் கருவேல மரங்களை அகற்றுதல், பிளாஸ்டிக் ஒழிப்பு ஆகியவற்றை இலக்காக கொண்டு அதிரையை சேர்ந்த தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியாக இந்த பணிகளை கடந்த சில மாதங்களாக செயல்படுத்தி வருகிறோம். இந்த முயற்சிக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர். மேலும் மிகுந்த வரவேற்பும், ஆதரவும் அளித்து வருகின்றனர்.

மரக்கன்றுகள் நடப்பட்டதோடு விட்டுவிடாமல் மரக்கன்றுகள் நடப்பட்ட இடங்களை தன்னார்வலர்கள் தொடர்ந்து கண்காணித்து பாதுகாத்து வருகின்றனர். தன்னார்வலர்களின் இந்த பணி தொடர்பாக அதிரை பொதுநல விரும்பிகளிடமிருந்து ஆதரவும், சிறந்த ஆலோசனைகளும் வரவேற்கப்படுகிறது' என்றார்.
 
 
 
 

7 comments:

  1. கடற்கரைதெருவில் மரம் நடுவதுபோல் போட்டோவே இல்லை?

    ReplyDelete
    Replies
    1. அதிரையின் அனைத்து பகுதியிலும் குறிப்பாக நடுத்தெரு, புதுமனைத்தெரு, சிஎம்பி லேன், ஆலடித்தெரு, கடற்கரைத்தெரு, ஈசிஆர் சாலை, மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இதுவரையில் 326 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

      Delete
  2. கடற்கரைதெருவில் மரம் நடுவதுபோல் போட்டோவே இல்லை?

    ReplyDelete
    Replies
    1. அதிரையின் அனைத்து பகுதியிலும் குறிப்பாக நடுத்தெரு, புதுமனைத்தெரு, சிஎம்பி லேன், ஆலடித்தெரு, கடற்கரைத்தெரு, ஈசிஆர் சாலை, மெயின் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகின்றன. இதுவரையில் 326 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

      Delete
  3. முதியோர்கள் வைத்த மரங்களால் கிடைக்கும் பலன்களை அனுபவிக்கும் இளைய சமுதாயம் செல்பி எடுத்துக்கொள்ளும் நிலையில் தான் உள்ளது இன்று மரம் நட்டால் நாளை பழம் கிடைக்கப்போவதில்லை; வரும் சந்ததினர்களை நினைத்து நாம் விதைகளை தூவ வேண்டும். மரம் வளர்ப்பு நல்ல திட்டம் சமூக ஆர்வலர்களுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. மாஷா அல்லா மிக மிக அருமையான சேவை.சுமுக விற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இதை தொடர்ந்து செய்தால் அருமையாக இருக்கும்.தயவு செய்து இதை கொடி பிடித்து விளம்பரம் ஆக்கி அரசியல் ஆக்கி விடாதிர்கள்.ஏனென்றால் நமது ஊரில் விள்ம்பரம் ஆக்கி இது போன்ற நற்செயல்களை கெடுத்து விடுவார்கள்.மேலும் இது போன்ற சேவை வளர அனைவரும் துஆ செய்யவும்.

    ReplyDelete
  5. வியக்கத்தக்க முயற்சி, பாராட்டுகிறேன் பங்களிப்போர் அனைவருக்கும் அல்லாஹ் பரக்கத் செய்வான் பசுமை புரட்சி குறித்து மக்களுக்கு தேவையான விழிப்புணர்வு ஊட்டுதல், இன்னும் அதிகமான தன்னார்வலர்களை இப்பணிக்காக ஈர்த்தல் என விரிவடைய வேண்டும்.முக்கியமாக, இதன் அடிப்படை ஆதாரமான நிலத்தடி நீரை உயர்த்துதல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும். நீர்நிலைகளை அதன் வாய்க்கால்களை சீர்படுத்துதல் என பணிகள் தொடர உண்மையான சமூக ஆர்வலர்களின் பங்களிப்பை பெற வேண்டும் தன் வீட்டின் முன்னுள்ள மரத்துக்கு மட்டுமாவது தண்ணீர் பாய்ச்சலாம்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.