.

Pages

Saturday, October 17, 2015

அதிமுக தொடக்க தினம்: அதிரையில் உற்சாக கொண்டாட்டம் !

1972 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆரால் தொடங்கப்பட்ட அதிமுகவின் 44-ஆம் ஆண்டு தொடக்க தினம் இன்று தமிழகமெங்கும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

இதையொட்டி அதிரை அதிமுக சார்பில் துவக்க தின விழா கொண்டாட்டப்பட்டது. நிகழ்ச்சிக்கு அதிமுக நகர செயலாளர் பிச்சை தலைமை வகித்தார். அவைத்தலைவர் முண்டாசு காதர், துணை செயலாளர் முஹம்மது தமீம், கவுன்சிலர் சிவக்குமார், செந்தில், துரை. பாஞ்சாலன், பூபாலன், அ.மு அப்துல் ஜப்பார், கவுன்சிலர் ஹாஜா முகைதீன், ஹாஜா பகுருதீன், அப்டா தமீம், அசோக், காமராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் லியாகத் அலி அதிமுக கொடியேற்றினார். எம்ஜிஆர், அண்ணா உருவ படங்களுக்கு வீரபத்திரன் மற்றும் கவுன்சிலர் உதயக்குமார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விழா முடிவில் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டன.

முன்னதாக அதிமுகவினர் அதிரை பேரூந்து நிலையப் பகுதிகளில் பேரணியாக சென்றனர். இந்த நிகழ்ச்சியில் அதிரை நகர அதிமுகவினர் பலர் கலந்துகொண்டனர்.
 
 
 
 
 
 

3 comments:

  1. அண்ணா ஆரம்பித்த திமுக கலைஞர் குடும்ப செய்த ஊழலால் மூழ்கியது; எம்ஜியரால் ஆரம்பிக்கப் பட்ட அதிமுக மதுக்கடைகள் தமிழகமெங்கும் திறந்து போதையில் மிதக்குது, பொதுமக்கள் தேர்ந்தெடுக்கப் பட்ட பிரதமர் வெளிநாட்டில்; தமிழக முதல்வரோ கொடநாட்டில் ... விவசாயி சுடுகாட்டில் .... புள்ளை குட்டி நடுரோட்டில் ... அப்பனோ டாஸ்மார்க்கில் இதான் நாட்டில் மாற்றம் கண்டுள்ளது.

    "மக்களின் மகிழ்ச்சியே எனது லட்சியம்ன" சொல்றீங்க (அம்மா ). நல்ல சொல்லுங்கம்மா பேப்பர் ல படிச்சாவது நாங்க தெரிஞ்சிக்கிறோம். பருப்பு விலை ரொம்ப கம்மியாயிருச்சு, ரோடு எல்லாம் ரொம்ப சூபரா இருக்கு, அதவிட பால் விலை ரொம்ப குறைஞ்சிருச்சு, ஒரு கவுன்சிலர் கூட கமிசன் கேட்கல, கொஞ்ச நாளுக்கு முன்னாடி Foreign இன்வெஸ்ட்மென்ட் ன்னு சொல்லி 2,000 கோடி தமிழ்நாடுக்கு கிடச்ச நாடகத்துல எங்களுக்கு வேலை கிடைச்சிடுச்சு இன்னும் உங்க ஆட்சில மக்களாகிய நாங்க எல்லாம் ரொம்ப மகிழ்ச்சியா தான் இருக்கோம். நீங்க ஒன்னும் கவலை படாதீங்க அம்மா அடுத்த முதல்வர் நீங்க தான் போங்க.

    ReplyDelete
    Replies
    1. அஸ்ஸலாமு அழைக்கும். சகோதரர்
      மஸ்தான் கனி.அவர்களே

      மிக்க சந்தோசம் சகோதரரே நாட்டை பற்றி நன்கு விளம்பி இருந்தீர்கள் .என்னமா உரைத்தாலும் வெளங்காது .நன்றி.(not except my brother )in clouding தலைவர்

      Delete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.