இந்த நிலையில் நேற்று இரவு பெரிய நெசவுக்காரத் தெருவில் TNTJ அதிரை கிளை சார்பில் தெருமுனை பிரசாரக் கூட்டம் நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில பிரசாரகரும், அல் ஹிக்மா மகளிர் அரபிக் கல்லூரியின் முதல்வருமாகிய அஸ்ரப்தீன் ஃபிர்தெளசி கலந்துகொண்டு 'ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்' என்ற தலைப்பில் சொற்பொழிவு ஆற்றினார். இதில் மஹல்லாவாசிகள், தவ்ஹீத் ஜமாத்தினர் பலர் கலந்துகொண்டனர்.







/ஷிர்க் ஒழிப்பு மாநாடு// எனக்கு ஒரு சந்தேகம். ஷிர்க்கை ஒழித்து, இஸ்லாத்தை அதன் தூய வடிவில் அறிந்து கொள்ள ‘வஹி மட்டும்’ போதும் என்பது தான் ததஜவின் நிலைப்பாடு. வஹி வராத ஸஹாபாக்கள் உள்ளிட்ட யாருடைய விளக்கமும் தேவையில்லைங்கிறது தான் ததஜ நிலைப்பாடு.
ReplyDeleteஅப்படியிருக்கும்போது, அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஸியின் விளக்கத்திற்கும் ,ஷிர்க் ஒழிப்பு மாநாட்டிற்கும் தேவை என்ன? வெறுமனே குரான் மற்றும் ஹதீஸ் தமிழாக்கம் மட்டும் போதுமல்லவா? குரானிலும் ஸுன்னாவிலும் போற்றிச் சொல்லப்பட்ட ஸஹாபாக்களின் விளக்கம் தேவையில்லை எனும்போது, ஃபிர்தௌஸி மற்றும் ததஜ அறிஞர்கள் (இவர்களுக்கும் வஹி வரவில்லை) உள்ளிட்ட யாரின் விளக்கத்திற்கும் தேவையில்லை என்பது தான் நீதமான நிலைப்பாடு. ததஜவினர் தங்களின் வஹி மட்டும் வாதத்தில் உண்மையாளர்களாக இருந்தால் தங்களின் பொதுக்கூட்டங்களிலும், மாநாடுகளிலும் வெறும் குரான், ஹதீஸ் தமிழாக்கம் (வஹி மட்டுமே) தான் சொல்லப்படவேண்டும். வஹி வராத ததஜ அறிஞர்களின் விளக்கத்திற்கு எந்த தேவையும் இல்லை.
குரான், ஹதீஸ் தமிழாக்கத்தை மக்களிடம் கொடுத்துவிட்டு இடத்தை காலி செய்யுங்கள். மக்கள் சொந்த விளக்கத்தில் புரிந்துகொள்வார்கள்.