.

Pages

Monday, January 25, 2016

பள்ளி, கல்லூரி, அரசு அலுவலங்களுக்கு 28 ந்தேதி உள்ளூர் விடுமுறை !

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் 169 வது ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு 28-01-2016 அன்று உள்ளுர் விடுமுறை என
மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தகவல் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் 169வது ஆண்டு ஆராதனை விழாவை முன்னிட்டு 28-01-2016 வியாழக்கிழமை அன்று தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளுர் விடுமுறையாக அறிவித்தும், அதற்கு பதிலாக 2016ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி (13-02-2016) சனிக்கிழமை தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் வேலை நாளாகவும் அறிவிக்கப்படுகிறது.  இந்த உள்ளுர் விடுமுறை அந்நிய செலவாணி முறிச்சட்டம் 1881ன் கீழ் வராது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில்  உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணியாளர்களுடன் இயங்கும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.