நிகழ்ச்சிக்கு புதிய விடியல் இணை ஆசிரியர் ரியாஸ் அஹமது தலைமை வகித்து உரை நிகழ்த்தினார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் அவர்கள் புத்தகத்தின் முதல் பிரதியை நூல் ஆசிரியர் அதிரை அஹ்மத் அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டார்.
நூலின் இரண்டாம் பிரதியை நூலிற்கு அணிந்துரை வழங்கிய காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தமிழாசிரியர் முனைவர் அஜீமுதீன் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவற்றை புதிய விடியல் இணை ஆசிரியர் ரியாஸ் அஹமது வழங்கினார். பின்னர் முனைவர் அஜீமுதீன் வாழ்த்துரை வழங்கினார். இதில், 'ஊடகத்துறைக்கு புதிதாக வரும் ஆர்வலர்களுக்கு மிகவும் பயனுள்ள நூலாக இவை அமையும்' என குறிப்பிட்டு பேசினார்.
அதிரை இணையதள ஊடகங்களின் பொறுப்பாளர்கள் விழா மேடைக்கு வரவழைக்கப்பட்டு 'நல்ல தமிழ் எழுதுவோம்' நூல் வழங்கப்பட்டது. இவற்றை விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட நியூஸ் 7 தொலைக்காட்சியின் துணை ஆசிரியர் குத்புதீன் வழங்கினார்.
நிறைவாக தமிழறிஞர் அதிரை அஹ்மத் அவர்கள் தனது ஏற்புரையில் நூல் வெளியிட உதவிய சென்னை இலக்கியச் சோலை பதிப்பகம் மற்றும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டார்.
முன்னதாக வழக்கறிஞர் முஹம்மது தம்பி வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சிகள் அனைத்தையும் தொகுத்து வழங்கினார். விழா முடிவில் முஸ்லீம் மலர் ஹசன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள், ஊடக ஆர்வலர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் நூல் அன்பளிப்பு செய்யப்பட்டது.
செய்தி மற்றும் படங்கள்:
அஃப்ரீத் ( மாணவ செய்தியாளர் )
அன்புள்ள காக்கா, அஸ்ஸலாமு அலைக்கும். மிக்க மகிழ்ச்சி.
ReplyDeleteஇந்த நிகழ்வில் வாழ்த்துரை வழங்கும்படி தாங்கள் வழங்கிய வாய்ப்பைத் தவறவிட வேண்டியதாகிவிட்டது.
நேற்றே அழைத்து கட்டளை இட்டு இருந்தால் இன்றைய தோப்புத்துறை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதை தவிர்த்துவிட்டு இந்த வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருப்பேன். எனது மரியாதைக்குரிய ஹாஜா முகைதீன் சார் அவர்களுடன் மேடையைப் பங்கிட்டுக் கொள்ளும் வாய்ப்பை தவறவிட வேண்டியதாகிவிட்டது. அல்லாஹ் எனக்கு இந்த வாய்ப்பை நாடவில்லை என்றே கருதுகிறேன்.
தங்களின் சாதனைகளில் இன்னொரு இன்றியமையாத சாதனையாக இதைக் கருதுகிறேன்.
இன்னும் இதுபோல பல அரிய நூல்களை அள்ளி வழங்க உங்களுக்கு நல்ல உடல்நலத்தை நீடித்துத் தரும்படி இறைவனிடம் வேண்டுகிறேன்.
அஸ்ஸலாமு அலைக்கும் ! மிக்க மகிழ்ச்சி ! بارك الله
ReplyDelete