கடந்த 2 ஆண்டுக்கும் மேலாக நடந்து வந்த இந்த வழக்கில் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. இதுதொடர்பாக நடத்தி முடிக்கப்பட்ட இறுதிகட்ட விசாரணையை அடுத்து இன்று தீர்ப்பு கூறப்பட்டது. இதில் அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் போடப்பட்ட வழக்கில் இவர் நிரபராதி எனக் கூறி இன்று விடுவிக்கப்பட்டார்.
இதுகுறித்து அதிரை பேரூராட்சி தலைவர் எஸ்.ஹெச் அஸ்லம் நம்மிடம் கூறுகையில், உண்மைக்கு கிடைத்த வெற்றி. போலியாக போடப்பட்ட வழக்கு என்பது கோர்டில் நிருபணமாகியுள்ளது. இறைவன் உண்மையோடு என்றும் இருப்பான். எல்லாப் புகழும் இறைவன் ஒருவனுக்கு' என்றார்.
எல்லா புகழும் இறைவனுக்கே.
ReplyDelete