தஞ்சாவூர் அரண்மனை வளாகத்தில் சங்கீத மகாலில் 27வது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி மாணவ மாணவியர்களுக்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கு.பரசுராமன், சட்ட மன்ற உறுப்பினர் திரு.எம்.ரெங்கசாமி, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் திருமதி. அமுதாராணிரவிச்சந்திரன், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் திரு.துரை.திருஞானம் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.
இவ்விழாவில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவ மாணவியர்களுக்கு நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, மற்றும் சிறந்த வாசகங்கள் எழுதும் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பேசியதாவது :
சாலை பாதுகாப்பு விழிப்புணர்வுக்கு நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவியர்களை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். சாலை பாதுகாப்பு விதிகளை பொது மக்கள் அனைவரும் கடைப்பிடிக்க வேண்டும். சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொறுப்பு மாணவர்கள் கையில் உள்ளது. விபத்துக்கள் தவிர்ப்பதற்கு சாலை பாதுகாப்பு விதிகளை பின்பற்றி கவனமுடன் வாகனங்களை வாகன ஒட்டிகள் பயன்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் முதன்மைக் கல்வி அலுவலக ஒருங்கிணைப்பாளர் திரு.ராம்குமார், வட்டார போக்குவரத்து அலுவலர் திரு.ராஜ்குமார் போக்குவரத்து ஆய்வாளர்கள் திரு.பிரபாகரன், திரு.செந்தில்ராம், திரு.மாணிக்கம், திரு.ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் போக்குவரத்து துணை ஆணையர் திரு.முனிராஜ் வரவேற்றார். முடிவில் மோட்டார் வாகன ஆய்வாளர் திரு.விஜயகுமார் நன்றி கூறினார்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.