.

Pages

Saturday, January 16, 2016

அதிரையில் நாளை போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம்!

*File Image
அதிரை உள்ளிட்ட தஞ்சை மாவட்ட அனைத்து பகுதியிலும் பிறந்த குழந்தை முதல், ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் முதல் தவணை நாளை 17-1-2016 காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை அனைத்து ஆரம்ப சுகாதார மையங்கள், அரசு மருத்துவமனைகள், உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் என அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதிரையில் அரசு மருத்துவமனை, முத்தம்மாள் தெரு, புதுமனை தெரு, கீழத்தெரு சங்கம், மாரியம்மன் கோயில் தெரு, காந்தி நகர், தைக்கால் தெரு, கடற்கரை தெரு, மேலத்தெரு சங்கம், பழஞ்செட்டி தெரு, செட்டி தோப்பு காலனி, பிள்ளைமார் தெரு உள்ளிட்ட  பகுதிகளில் சிறப்பு முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் பொது சுகாதாரத் துறை சார்பில் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என். சுப்பையன் அவர்கள் பேசியதாவது:
தஞ்சாவூர் மாவட்டத்தில் 17.01.2016 அன்று நடைபெறும் முதலாவது சுற்றில் 2 இலட்சத்து 24 ஆயிரத்து 636 குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  இப்பணியில் 6 ஆயிரத்து 40 சொட்டு மருந்து வழங்கும் பணியாளர்களும் 178 மேற்பார்வையாளர்களும் மற்றும் 120 மருத்துவ அலுவலர்களும் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.

நகரப்பகுதிகளில் 128 மைங்களும், ஊரக பகுதிகளில் ஆயிரத்து 382 மையங்களும் ஆக மொத்தம் ஆயிரத்து 510 சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், பள்ளிக்கூடங்கள், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பேருந்து நிலையங்கள், புகை வண்டி நிலையங்கள், கோயில்கள் மற்றும் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் போலியோ சொட்டு மருந்து மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

பேருந்து நிலையங்கள், புகைவண்டி நிலையங்களில் 17.01.2016 அன்று முதல் சுற்றாக சொட்டு மருந்து வழங்க உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பொது சுகாதாரத்துறை, ஊட்டச்சத்து துறை, சமூக நலத்துறை வருவாய்த்துறை, கல்வித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, நகராட்சிகள், உள்ளாட்சித்துறை, அனைத்து தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் ஆகியோர் பங்கேற்பில் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

17.01.2016 அன்று பிறந்த குழந்தைக்கும், மேலும் எத்தனை முறை தடுப்பு மருந்து குழந்தைகளுக்கு கொடுத்திருந்தாலும், இந்த முகாமில் கூடுதல் தவணையாக கட்டாயம் சொட்டு மருந்து வழங்கப்பட வேண்டும். இந்த தடுப்பு மருந்து அரசின் மூலமாக முற்றிலும் இலவசமாகப் வழங்கப்படுகிறது.

வேலை நிமித்தமாக வெளி மாநிலங்களிலிருந்து வந்து தற்காலிகமாக தங்கியிருக்கும் மக்களின் குழந்தைகளுக்கும் மற்றும் நாடோடிகளாக இடம் பெயர்ந்து செல்லும் மக்களின் குழந்தைகளுக்கும் விடுபடாமல் போலியோ சொட்டு மருந்து கொடுப்பதற்கு நடமாடும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
முகாம்களில் உள்ளுர் மற்றும் வெளியூர் குழந்தைகள் யாராக இருந்தாலும் சொட்டு மருந்து வழங்கப்பட்டு குழந்தைகள் இடது கை சுண்டு விரலில் அடையாள மை வைக்கப்படும்.

போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்க 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் "இரண்டு சொட்டு" போலியோ சொட்டு மருந்தை தங்கள் குழந்தைகளுக்கு தவறாமல் கொடுத்து தஞ்சை மாவட்டத்தை போலியா இல்லாத மாவட்டமாக அடைய வேண்டும் என பொது மக்களை கேட்டுக் கொள்கிறேன்.  இவ்வாறு மாவட்ட ஆட்சியர் அவர்கள் பேசினார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.