போலி ஆவணங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விசா பெற்றுக்கொடுக்க முயன்ற பெங்களூருவை சேர்ந்த 3 ‘டிராவல் ஏஜெண்டுகள்’ பிடிபட்டனர்.
சென்னையில் உள்ள இங்கிலாந்து துணை தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
போலியான ஆவணங்கள், போலியான குடியேற்ற முத்திரையை (இமிக்ரேசன்) பயன்படுத்தி இங்கிலாந்து உள்ளிட்ட பல நாடுகளுக்கு செல்ல, சட்டவிரோதமாக தங்களுடைய வாடிக்கையாளர்களுக்காக விண்ணப்பித்து, விசா பெற முயற்சி செய்த பெங்களூரை சேர்ந்த 3 டிராவல் ஏஜெண்டுகள் பிடிபட்டனர்.
இவர்களிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். இங்கிலாந்து நாட்டுக்கு செல்ல விசா பெறுவதற்கு விண்ணப்பிக்கப்பட்ட 8 விண்ணப்பதாரர்களின் பாஸ்போர்ட்டில் சட்டவிரோதமாக போலியான குடியேற்ற முத்திரை பதிக்கப்பட்டிருந்தது மூலம் இந்த மோசடி அம்பலத்துக்கு வந்தது.
இதையடுத்து போலியான முத்திரை பதிக்கப்பட்ட பாஸ்போர்ட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, அந்த விண்ணப்பதாரர்களுக்கு விசா மறுக்கப்பட்டது. தொடர்ந்து சென்னையில் உள்ள இங்கிலாந்து துணை தூதரகத்தை சேர்ந்த குடியேற்ற அமலாக்கப்பிரிவு அதிகாரிகளும் விசாரணைகளை மேற்கொண்டனர்.
விசாரணையில் இந்த 3 ஏஜெண்டுகளும் மோசடி செய்தது உறுதியாகியதையடுத்து, மேலும் விசாரிக்குமாறு பெங்களூரு மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் போலியான ஆவணங்கள் மூலம் விசா பெற முயன்ற 8 விண்ணப்பதாரர்களும் சமீபத்தில் குடியேற்ற அமலாக்கப்பிரிவில் தங்கள் பாஸ்போர்ட்டு தொலைந்துவிட்டதாக கூறி, புதிய பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பம் அனுப்பியது தெரியவந்தது.
இதையடுத்து மோசடி செய்து விசா பெற முயன்ற 8 பாஸ்போர்ட்டுகளையும் மண்டல பாஸ்போர்ட்டு அலுவலகம் ரத்து செய்ததோடு, மோசடி செய்ததற்கான ஆவணங்களையும், ஆதாரங்களையும் மத்திய குற்றப்பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்துள்ளது. அவர்கள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து பெங்களூரு மண்டல பாஸ்போர்ட்டு அதிகாரி கார்த்திக்கேயன் கூறும்போது, இந்த விவகாரத்தில் உண்மை நிலையை அறிய நாங்கள் சென்னையில் உள்ள இங்கிலாந்து துணை தூதரகம் மற்றும் உள்ளூர் போலீசாரோடு இணைந்து செயலாற்றி வருகிறோம். தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இங்கிலாந்து தூதரகத்தை சேர்ந்த அதிகாரியான சாமுவேல் டார்லிங் கூறும்போது, விசா மோசடி செய்வதை இங்கிலாந்து அரசு மிகவும் கவனமாக கையாள்கிறது. மோசடி செய்பவர்களுக்கு விசா மறுக்கப்படுவது மட்டுமல்லாமல், அவர்கள் பாஸ்போர்ட்டும் தடை செய்யப்படுகிறது. மேலும் அவர்கள் இங்கிலாந்துக்கு செல்ல 10 ஆண்டுகள் தடை செய்யப்படுவதோடு, கிரிமினல் விசாரணையும் மேற்கொள்ளப்படும் என்றார்.
நன்றி: தினத்தந்தி

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.