.

Pages

Tuesday, January 26, 2016

கோட்டை அமீர் விருது பெற்ற M.B அபூபக்கருக்கு பேரூராட்சி துணை தலைவர் பிச்சை வாழ்த்து !

தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மதநல்லிணக்கத்துக்காக 'கோட்டை அமீர்' விருது வழங்கப்பட்டு வருகிறது. தகுதியானர்வர்களை தேர்ந்தெடுத்து இந்திய சுதந்திர தினம் - குடியரசு தினத்தன்று இந்த விருது வழங்கப்படும்.

இதில் அதிரை அஜ்ஜாவியத்துல் ஷாதுலியா ட்ரஸ்ட் நிர்வாக செயலாளராக பொறுப்பில் இருப்பவர் M.B. அபூபக்கர். இவருக்கு தமிழக அரசின் உயரிய விருதாக கருதப்படுகிற 'கோட்டை அமீர்' விருதை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா இன்று நடந்த குடியரசு தின விழாவில் வழங்கி கெளரவித்தார்.

கோட்டை அமீர் விருது பெற்ற M.B அபூபக்கருக்கு பேரூராட்சி துணை தலைவரும், அதிமுக அதிரை பேரூர் செயலாளருமாகிய என். பிச்சை சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அதிரை பேரூர் துணை செயலாளர் முஹம்மது தமீம், முஹம்மது ஹனீபா, கவுன்சிலர் சிவக்குமார், வார்டு செயலாளர் ஹாஜா பகுருதீன் ஆகியோர் சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

2 comments:

  1. An kakka. Vagkeya. Veruthu
    makelchchekkureyathu
    ajmeer store sarpaka vaaththu kenrean

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.