இந்நிலையில் நாடு முழுவதும் 67 ஆம் ஆண்டு குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி பல்வேறு துறைகளில் சாதனை நிகழ்த்தியவர்களுக்கு குடியரசு தினத்தில் விருது வழங்கப்பட்டது.
இதில் அதிரை அஜ்ஜாவியத்துல் ஷாதுலியா ட்ரஸ்ட் நிர்வாக செயலாளராக பொறுப்பில் இருப்பவர் ஹாஜி M.B. அபூபக்கர். இவருக்கு தமிழக அரசின் உயரிய விருதாக கருதப்படுகிற 'கோட்டை அமீர்' விருதை தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா கடந்த 26 ந்தேதி நடந்த குடியரசு தின விழாவில் வழங்கி கெளரவித்தார்.
இதையொட்டி சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் எதிர்வரும் 01-02-2016 அன்று திங்கட்கிழமை மாலை 4.30 மணியளவில் சம்சுல் இஸ்லாம் சங்கத்தில் 'கோட்டை அமீர்' விருது பெற்ற ஹாஜி M.B. அபூபக்கர் அவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அனைவரும் தவறாது கலந்துகொண்டு சிறப்பித்து தரும்படி சம்சுல் இஸ்லாம் சங்கம் சார்பில் அன்புடன் அழைப்பு விடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சம்சுல் இஸ்லாம் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
பல குற்றச்சாட்டுகள் உள்ளநிலையில் அதுவும் குறுப்பிட்ட சங்கத்தில் பாராட்டு விழ காணப்போகும் கோட்டை அமீரை பற்றி; அவரின் சாதனைகள் பற்றி விளக்கம் தருவார்களா? அரசியலுக்கு அப்பாற்பட்டு எந்த சமய நல்லிணக்கத்தில் (நிகழ்ச்சியில்... )கலந்துக்கொண்டார் ? எந்த மத பிரச்சனையை தீர்த்தார்? அதற்க்கான மேற்கொண்ட முயற்சிகள் என்ன? எண்ணற்ற கேள்விகளோடு வாசகர்கள் உள்ளனர் ... பதிவை எதிர்ப்பார்ப்போம்.
ReplyDelete