.

Pages

Saturday, January 23, 2016

உடல் நலம் பாதித்தவர்களுக்காக ஜும்மா பள்ளிகளில் PFI திரட்டிய தொகை உரியவர்களிடம் ஒப்படைப்பு !

உடல் நலம் கடுமையாக பாதிப்படைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் 3 ஏழை சகோதரர்களின் உயர் சிகிச்சைக்கு உதவும் வகையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில் கடந்த [ 08-01-2016 ] அன்று நடந்த அதிரையின் அனைத்து ஜும்மா பள்ளிவாசல்களிலும் நிதி வசூல் திரட்டும் பணி நடந்தது.

மேலும் பட்டுக்கோட்டை, மதுக்கூர், முத்துப்பேட்டை, ஒரத்தநாடு உள்ளிட்ட பகுதிகளின் ஜும்மா தொழுகையில் நிதி திரட்டும் பணி நடந்தது. இதன் பணிகளில் PFI பட்டுக்கோட்டை டிவிசன் பிரசிடென்ட் வழக்கறிஞர் நிஜாம் தலைமையில். PFI மற்றும் எஸ்டிபிஐ பொறுப்பாளர்கள் ஈடுபட்டனர். இதில் மொத்தம் ரூ 15,300 நிதி திரட்டப்பட்டது. இந்த நிதியை தரகர் தெருவை சேர்ந்த ஒரு நபரின் சிகிச்சைக்காகவும், கீழத்தெருவை சேர்ந்த ஒரு நபருக்கும், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒரு நபரின் சிகிசைக்கு என  3 பேருக்கும் தலா ரூ 5,100 வீதம் பகிர்ந்தளிக்கப்பட்டன.

இவற்றை PFI பட்டுக்கோட்டை டிவிசன் பிரசிடென்ட் வழக்கறிஞர் நிஜாம், எஸ்டிபிஐ அதிரை நகர செயற்குழு உறுப்பினர் அன்வர், PFI பொறுப்பாளர் கபூர் ஆகியோர் பயனாளிகளின் இருப்பிடத்திற்கு நேரில் சென்று வழங்கினார்கள். மருத்துவ உதவியை பெற்றுக்கொண்ட பயனாளிகள் நிதி உவியளித்த அனைத்து நல்லுள்ளங்களுக்கும்,  ஏற்பாடு செய்து கொடுத்த PFI பட்டுக்கோட்டை டிவிசன், எஸ்டிபிஐ கட்சியினருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.