அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 11 வது வார்டு பகுதியில் காணப்படும் குடியிருப்பு பகுதியிலிருந்து வெளியேறும் கழிவுநீர் அப்பகுதியின் சாலையோரத்தில் புதைக்கப்பட்ட குழாய் மூலம் வெளியேறி வந்தது.
இந்நிலையில் குழாயில் ஏற்பட்ட உடைப்பால், இதிலிருந்து கழிவு நீர் வெளியேறி பழைய போஸ்ட் ஆபீஸ் பகுதியின் பிராதன சாலையில் ஓடிக்கொண்டிருந்தது. இதனால் இப்பகுதியின் வர்த்தகர்கள் - குடியிருப்புவாசிகள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர்.
இந்நிலையில் வடிகால் அருகே பெரிய பள்ளம் தோண்டி அதில் குடியிருப்பு கழிவு நீர் விடப்பட்டு வந்தது. அதில் தேங்கி நின்ற கழிவுநீர் துர் நாற்றம் வீசி வந்தது. இதனால் இந்த பகுதி வர்த்தகர்கள் மிகவும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் குறுக்கு சாலையின் முகப்பு பகுதியில் உள்ள கழிவுநீர் பள்ளம் பெரிதாக காணப்பட்டதால் அப்பகுதி குடியிருப்பு வாசிகள் கடந்து செல்ல மிகவும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.
இதுதொடர்பாக இந்த பகுதியின் குடியிருப்பு வாசிகள் மற்றும் வர்த்தகர்கள் கவுன்சிலர் அன்சார்கானிடம் புகார் அளித்தனர். கழிவு நீரை சீராக கொண்டு செல்லும் விதத்தில் முறையான வடிகால் வாய்க்கால் அமைத்து தர அதிரை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட வலியுறுத்தினர்கள்.
இந்நிலையில் இன்று காலை தனியார் வாகன ஆக்கிரமிப்பை அகற்ற அதிரை வருகை தந்த பட்டுக்கோட்டை சப் கலெக்டர் ராஜசேகரன் அவர்களிடம் பொதுமக்கள் புகார் குறித்து கவுன்சிலர் அன்சர்கான் முறையிட்டார். புகாரை கவனமாக கேட்டுக்கொண்டவர் நேராக சம்பந்த்தபட்ட பகுதியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது உடனிருந்த அலுவலரிடம் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க கேட்டுக்கொண்டார்.
ஆய்வின் போது பட்டுக்கோட்டை தாசில்தார் சேதுராமன் மற்றும் வருவாய் ஆய்வாளர் பழனிவேல், அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் உடனிருந்தனர்.
உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு துரிதமாக எடுத்து சென்ற கவுன்சிலர் அன்சர்கானை இந்த பகுதியினர் வெகுவாக பாராட்டினர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.