.

Pages

Monday, January 18, 2016

விரைவில் 108 ஆம்புலன்ஸ் சேவையில் இரு சக்கர வாகனங்கள் !

அந்த காலத்து குதிரை வண்டி சேவை முதல் இந்த காலத்து டெம்போக்கள் வரை ஆம்புலன்ஸின் பரிணாம வளர்ச்சி, மக்களின் உயிரை காப்பாற்ற பல வகையில் உதவி இருக்கிறது. இதன் அடுத்தகட்டமாக, தமிழ்நாடு சுகாதாரத் துறை, இருசக்கர வாகனங்களில் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கவுள்ளது.

விபத்துக்களால் ஏற்படும் உயிரிழப்பை தடுக்க, நெரிசலான சாலைகளில் விரைவாக செல்லக்கூடிய வாகனம் தேவைப்படும், குறைந்தபட்சத்தில் முதலுதவி அளிப்பதற்காவது மருந்துகளும், ஓரிரு நிபுணரும் தேவை. இதன் சாத்தியக்கூறுகளை அறிய, முதல் கட்டமாக சென்னை மற்றும் கும்பகோணத்தில் பிப்ரவரி 22-ம் தேதி, மகாமகத் திருவிழா அன்று, இந்த சேவையை துவக்க முடிவு செய்துள்ளனர்.

இந்த திட்டம், விபத்துகளின்போது ஆம்புலன்ஸ்கள் சாலை நெரிசலில் சிக்கி வீணாகும் நேரத்தை குறைத்து, விரைவாக முதலுதவியோ அல்லது மருத்துவ உதவியோ அளிப்பதற்கு பயன்படும். நகர்ப்புறங்களில் விபத்துகள் ஏற்பட்டால், குறுகலான சாலைகள், சாலை நெரிசல், பழுதான சாலைகள், இவைகளை கடந்து வருவதற்கு ஒரு சராசரி ஆம்புலன்ஸிற்கு அதிக நேரமாகும். ஆனால் இரு சக்கர வாகனங்கள், இந்த தடைகளை விரைந்து கடக்கும் என்பதால் இந்த திட்டத்திற்க்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்" என சுகாதாரத்துறையை சேர்ந்த ஒரு உயரதிகாரி தெரிவித்துள்ளார்.

வாகனங்களில் முதலுதவிக்கு தேவையான அனைத்து பொருட்களும் இடம்பெற்றிருக்கும். முதலுதவி அளித்து விபத்தில் சிக்கியவரை மருத்துவமனைக்கு அனுப்புவது வரையோ, அல்லது ஒரு ஆம்புலன்ஸ் வந்து அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கும் வரையோ இந்த முதலுதவி நிபுணர் பாதிக்கப்பட்டவரை கவனித்துக்கொள்ளும் அளவிற்கு அவருக்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டிருக்கும்.

108 எண்ணின் மற்ற சேவைகளைப் போலவே இந்த சேவையிலும், மையத்திற்கு தகவல் வந்த உடன், அருகே இருக்கும் நிபுணர், தன் வாகனம் மற்றும் மருத்துவ பொருட்களுடன் அந்த இடத்திற்கு விரைவார். பாதிக்கப்பட்டவர் வாகனத்தில் செல்ல முடியும் நிலையில் இருந்தால், அந்த நிபுணரே அவரை அருகே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வார்.

விபத்துகளைத்தாண்டி பல அவசர மருத்துவ தேவைகளுக்கும் இந்த சேவை பயன்படும் அளவில், 40 மருத்துவ பொருட்களை உள்ளடக்கிய பெட்டியை வாகனத்தில் பொருத்தியிருப்பதாக தெரிகிறது. மாரடைப்பு, வலிப்பு, விஷமேறுதல், தீக்காயம் என பலவிதமான மருத்துவத்திற்கு தேவையான பொருட்கள் இதில் இடம்பெறும்.

பா. அபிரக் ஷன் ( மாணவப் பத்திரிக்கையாளார் )
நன்றி: விகடன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.