இந்தியாவில் காவல்துறைக்கு 100, தீயணைப்பு துறைக்கு 101, ஆம்புலன்ஸ் சேவைக்கு 102, பேரிடர் நிர்வாக உதவிக்கு 108 என பல்வேறு எண்கள் பயன்பாட்டில் உள்ளன.
இதுதவிர பல்வேறு மாநிலங் களும் தனித் தனியே அவசர உதவி எண்களை பயன்படுத்தி வருகின்றன.
உதாரணத்துக்கு டெல்லியில் அவசர உதவி கோரும் பெண்களுக்கு 181, பெண்கள், குழந்தை கள் காணாமல் போனது தொடர்பான புகார்களுக்கு 1094, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு 1096 என பல்வேறு எண்கள் பயன்பாட்டில் உள்ளன.
இந்நிலையில் அனைத்து அவசர உதவிகளுக்கும் 112 என்ற ஒரே எண்ணை தொடர்பு கொள்ளும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த எண் நடைமுறைக்கு வந்தபின், இதுகுறித்து விழிப்புணர் வின் அடிப்படையில் ஓராண்டுக்குள் மற்ற அனைத்து எண்களும் முடக் கப்படும் என அதிகார வட்டாரங்கள் தெரிவித்தன.
நன்றி:தமிழ் தி இந்து
போலீஸ் துறைக்கு ஒரு நம்பர் அரசு மருத்துவமனைக்கு ஒரு நம்பர் EB க்கு ஒரு நம்பர்; தன்னுடைய செல் போன் நம்பர் கூட நியாபகம் வைத்துக்கொள்ளமுடியாத நிலைமையில் அத்தனையும் மனதில் வைத்துக்கொள்வது முடியாத காரியம்.. அப்படியே குறுப்பிட்ட நம்பரை அவசர உதவிக்கு அழைத்தாலும் " ஹல்லோ யாரு இந்நேரத்துல பேசுறது " அப்படின்னு ஆயா குரல் கேட்கும்: அடிக்கடி நம்பரை மாற்றுவதால் இந்த சிக்கல். எல்லாத்தையும் integrated பண்ணி ஒரு பொது நம்பர் 112 கொடுப்பது மக்களுக்கு பெரிய வரப் பிரசாதம் தான் அதே நேரத்தில் வேளையில் இருப்பவர் தூங்காமல் இருக்கணும் இல்லையேல் சங்கு தான்.ஸ்வீட்டா பேசி கலாய்க்காமல் இருந்தால் நல்லது.
ReplyDelete