.

Pages

Sunday, March 20, 2016

துபாயில் தமிழக கல்வியாளருக்கு வரவேற்பு !

துபாய் வந்த தமிழக முஸ்லிம் கல்வி இயக்கத்தின் நிர்வாகி சி.எம்.என். சலீம் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர் தமிழகத்தில் கல்வியும், மருத்துவமும் இலவசமாக அளிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இதன் மூலமே சமூகம் மேம்பாடு காணமுடியும் என்றார். மேலும் தங்களது கல்வி இயக்கத்தின் மூலம் பல்வேறு கல்வி மற்றும் சமுதாய மேம்பாட்டுப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணியின் மூலம் கல்வி குறித்த சிறப்பான பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு ஒத்துழைப்பு அளித்து வரும் அனைவருக்கும் நன்றி கூறினார்.

இந்த வரவேற்பு நிகழ்வில் அமீரகத்தில் கல்வி மற்றும் சமுதாயப் பணிகளில் தங்களை ஈடுபடுத்தி வரும் திருச்சி பைசுர் ரஹ்மான், பூதமங்கலம் முகைதீன் அப்துல் காதர், திருச்சி ஜாபர் சித்திக், பத்திரிகையாளர் முதுவை ஹிதாயத் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.