அதிக விலையுள்ள மீன் எது? வஞ்சிரம் மீன் என்று நாம் சொல்லுவோம். ஆனால், ஜப்பானில் இந்தக் கேள்வியைக் கேட்டால் ‘ட்யூனா’ மீன் என்று சொல்வார்கள். அங்கு இந்த மீன்தான் மிகவும் விலையுயர்ந்த மீனாம். ட்யூனா மீனை தமிழில் சூரை மீன் என்று சொல்வார்கள்.
‘ட்யூனா’ மீன்கள் உலகிலேயே மிகச் சுவையானவையாம். பசிபிக் கடலில் அதிகம் கிடைக்கும் இந்த மீனின் ருசிக்கு ஜப்பானியர்கள் அடிமை. அதிலும் ‘ப்ளூஃபின் ட்யூனா’ இன்னும் சுவை அதிகம். சில ஆண்டுகளுக்கு முன்பு ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ‘ப்ளூஃபின் ட்யூனா’ மீன் ஏலம் விடப்பட்டது. 222 கிலோ எடையுள்ள இந்த மீன் இந்திய மதிப்பில் 9 கோடியே 43 லட்சம் ரூபாய்க்கு விற்பனையானது.
உலகிலேயே அதிக விலைக்கு விற்கப்பட்ட மீன் இதுதான். இதை ஏலத்துக்கு எடுத்தவர்கள் ஒரு சிறிய மீன் துண்டை 1,300 ரூபாய்க்கு விற்றார்கள். ஜப்பானில் ட்யூனா மீன் தொடர்ந்து பிடிக்கப் பட்டதால், தற்போது இந்த மீன் பெருமளவு அழிந்துவிட்டது என்று கூறுகிறார்கள்.
- சதீஷ், 7-ம் வகுப்பு, மாநகராட்சிப் பள்ளி அம்பத்தூர், சென்னை.
நன்றி: தி தமிழ் இந்து

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.