அதுபற்றிய விபரம் வருமாறு:
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே மூக்குடி கிராமத்தில் தெற்கு தெருவில் வசித்து வருபவர் கலா வயது- 30, இவரது கணவர் பெயர் முத்தையா இவர் சிங்கப்பூரில் வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு ஏற்கனவே 11 வயதில் ஒரு பெண், 2 வயதில் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் ஆண் குழந்தை இல்லையென்று தந்தை ஊரான அணைக்கட்டில் ஒரு ஆண் குழந்தையை ஒன்னே கால் வயதில் வாங்கி வந்து மூக்குடியில் வளர்த்து வரும் நிலையில் கடந்த 12-ம் தேதி ஆண் குழந்தை திணேசை வீட்டிற்குள் பூட்டி வைத்துவிட்டு ரேசன் கடைக்கு சென்று விடுகிறார்.
பொருட்கள் வாங்கி வீட்டுக்கு திரும்பி வந்தபோது திணேஷ் வீட்டிற்குள் மலம் கழித்து விட்டு அதை சிதறடித்து விட்டு அழுது கொண்டிருந்ததை பார்த்ததும் கலா கோபமடைந்து அருகில் கிடந்த ஒரு குச்சியால் குழந்தையை அடித்துள்ளார். அடியை தாங்க முடியாத குழந்தை மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற கலா நடுவழியிலேயே குழந்தை இறந்து விட்டதென்று முடிவு செய்து தனியார் ஆம்புலன்சில் அணைக்காட்டுக்கு கொண்டு சென்று அவரின் அக்காள் கனவரின் உதவியுடன் அவர் அப்பா குடிஇருக்கும் ஒரு தென்னந்தோப்பில் புதைத்து விட்டு மூக்குடிக்கு வந்து விடுகிறார்.
குழந்தை இல்லாமல் கலா மட்டும் திரும்பி வந்ததை அறிந்த பக்கத்து வீட்டுக்கார்கள் போலீசார்க்கு தகவல் தெரிவித்துள்ளனர் அதனை தொடர்ந்து அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன், எஸ்.ஐ கோபநாத் கலாவை அழைத்துக்கொண்டு அணைக்காடு வந்து கலா காட்டிய இடத்தில் தோண்டிய போது டிராயர் சட்டையுடன் குழந்தை இரண்டடி ஆழத்தில் புதைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு தோண்டி எடுத்து அரசு மருத்துவர் நியூட்டன் சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தார்.
அங்கு விசாரித்த போது அணைக்காடு கிராமத்தை சேர்ந்த பிரசிதா(வயது 23) மற்றும் கறம்பக்குடி பிரதீப் (வயது 25) ஆகியோரின் குழந்தை தான் கவி பிரசாத் (வயது 2 1/2 )என்றும் , இவர்கள் இருவரும் பிரிந்து பிரசிதா வேறு ஒருவரை திருமணம் செய்து சென்றதால் தனது புதிய வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இந்த குழந்தை இருந்துவிட கூடாது என்று தன் வீட்டருகே குடியிருக்கும் கலாவின் தந்தை மூலம் இந்த குழந்தை யாருக்கு தெரியாமல் கலாவிடம் விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.
செய்தி மற்றும் படங்கள்:
நிருபர் ஐ.எம் ராஜா,பட்டுக்கோட்டை
எவ்வளவு பொய் சொல்லி மறைத்தாலும் தன பிள்ளையை மறைக்க முடியாது போன்ற சம்பவங்கள் நாட்டில் நடக்குது.
ReplyDeleteகுழந்தையின் பாசத்தை அறியாத பிரசிதாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை தான் வாங்கிக் கொடுக்க வேண்டும். இதச் சம்பவத்துக்கு துணைக்கு போனவர்களும் தண்டிக்க வேண்டும். பணத்தை கட்டி வெளியே வந்தாலும் அதன் பிஞ்சு மனசு பாவம் சும்மா விடாது. மூக்குடி கிராமத்தில் இப்படியொரு மூதேவி!