.

Pages

Tuesday, March 15, 2016

விக்ஸ் ஆக் ஷன் 500 மாத்திரை விற்பனை நிறுத்தம்!

"உங்களுக்கு தலைவலியா... ஜலதோஷமா? ஆமாம்ப்பா... ஆமாம்...!

அப்படியென்றால் விக்ஸ் ஆக் ஷன் 500 மாத்திரையை எடுத்தக்கோங்க...!"  என்ற கவர்ச்சிகரமான விளம்பரத்தின் மூலம், 20 வருடங்களுக்கு முன்பு நுழைந்தது விக்ஸ் ஆக்ஷன் 500 எக்ஸ்ட்ரா என்ற மருந்து நிறுவனம்.

மாத்திரை என்றால் மெடிக்கல்ஸை நோக்கி ஓடுவதை மாற்றி இந்தியாவின் கடைகோடி கிராமத்தின் மளிகை கடைகள், பெட்டிக் கடைகளிலும் இந்த மாத்திரை கிடைக்கும்படி செய்தது இந்த நிறுவனம். எந்த நோய் என்றாலும் முதல் அறிகுறியாக வரும், தலைவலி, காய்ச்சல், உடம்பு வலிக்கு இந்த மாத்திரையை வாங்கி சாப்பிடுவது வழக்கமாக இருந்து வந்தது. இதைப் பற்றி ஆய்வு செய்த மருத்துவ ஆராய்ச்சி குழுக்கள்,  அதிக டோசேஜ் காரணமாக புழக்கத்தில் இருந்து வரும் சில மருந்துகளை தடை செய்ய அரசுக்கு பரிந்துரை செய்தது.

இதையடுத்து பக்க விளைவுகளை ஏற்படுத்தும் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக டோசேஜ் கொண்ட 344 வகையான மருந்து உற்பத்தியை இந்தியாவில் தடை செய்வதாக மத்திய அரசு அண்மையில் அறிவித்தது. இது தொடர்பாக அந்தந்த மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.

இந்நிலையில் விக்ஸ் ஆக் ஷன் 500 மாத்திரைகளை தயாரிக்கும்,  பிராக்டர் அன்ட் கேம்பலின் விக்ஸ் ஆக்ஷன் - 500 எக்ஸ்ட்ரா என்ற மருந்து தயாரிப்பு நிறுவனம்,  தங்களுடைய மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனையை நிறுத்திவிட்டதாக அறிவித்துள்ளது. இதேபோன்று கோரக்ஸ் என்ற இருமல் டானிக்கை தயாரிக்கும் நிறுவனமும் தயாரிப்பை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

-த. ஜெயக்குமார்
நன்றி: விகடன்

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.