.

Pages

Thursday, March 24, 2016

மார்க்க கல்வி - உலக கல்வியில் சாதனை நிகழ்த்திய கல்லூரி மாணவன் !

அதிரை அடுத்துள்ள சம்பைபட்டினத்தை சேர்ந்தவர் நஜ்முதீன். இவரது மகன் ஹபீபுல்லாஹ். அதிரை சிஎம்பி லேன் பகுதியில் அமைந்துள்ள இஜாபா பள்ளியில் தங்கிருந்து தீனியாத் பாடம் படித்து வருகிறார். மேலும் அதிரை மரைக்கா பள்ளியில் சுமார் 60 மாணவர்களுக்கு காலை, மாலை இரண்டு நேரங்களில் குர்ஆன் ஓத கற்றுக்கொடுப்பதுடன் இஸ்லாமிய மார்க்க அடிப்படை கல்வியை கற்றுக்கொடுத்து வருகிறார்.

இந்த நிலையில் அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் கணினி அறிவியல் பாடப் பிரிவில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இன்று காலை கல்லூரியின் 61 வது கல்லூரி ஆண்டு விழா மற்றும் நிறுவன நாள் விழா நடந்தது. இதில் வகுப்பளவில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதல் தரம் பெற்றதற்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதல் வழங்கி கெளரவிக்கப்பட்டது. இவற்றை எம்.கே.என் ட்ரஸ்ட் நிர்வாகி நீதிபதி கே. சம்பத் வழங்கினார். மேலும் மார்க்க கல்வி - உலக கல்வியில் சாதனை நிகழ்த்தி வரும் மாணவனை பலரும் பாராட்டினர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.