தஞ்சாவூர் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் 18 வயது நிரம்பிய மாணவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதன் அவசியம் குறித்து கல்லூரி ஒருங்கிணைப்பாளர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள 34 கல்லூரிகளை சேர்ந்த 18 வயது நிரம்பிய கல்லூரி மாணவர்களை வாக்காளர் பட்டியலில் அவசியம் இடம் பெற்றிருக்க வேண்டுமெனவும், பெயர் சேர்க்காதவர்கள் உடனடியாக வாக்காளர்களாக பதிவு செய்திட வேண்டுமெனவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும், சுதந்திரமான தேர்தல் நடைபெறவும் தஞ்சாவூர் மாவட்டத்தில் தேர்தல் நேர்மையாகவும், சிறப்பாகவும் நடைபெறவும் மாணவர்கள் தங்களின் 100 சதவிகித ஒத்துழைப்பை நல்க வேண்டுமெனவும் மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 2175 வாக்குச் சாவடிகளிலும் மடிக்கணினி மற்றும் வெப் கேமிரா மூலம் கண்காணிக்கப்பட உள்ளதால், கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாகவும் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் என்.சுப்பையன் அவர்கள் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.பெ.சந்திரசேகரன், வருவாய் கோட்டாட்சியர் திரு.ஜெய்பீம், கல்லூரி பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.