.

Pages

Sunday, March 13, 2016

அதிரையில் அஸர் முதல் இஷா வரை நடந்த ஒளிமயமான குடும்ப நிகழ்ச்சி!

தஞ்சை தெற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - பட்டுக்கோட்டை டிவிசன் சார்பில் 'தாருல் நூர்' ( ஒளிமயமான வீடு ) சகோதரத்துவ குடும்பங்களின் சங்கம நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை அஸர் முதல் இஷா தொழுகை வரை அதிரை சாரா திருமண மகாலில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு பி.எஃப்.ஐ தஞ்சை மாவட்ட செயலாளர் பர்ஹான் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பி.எஃப்.ஐ மாநில செயற்குழு உறுப்பினர் ஜர்ஜீஸ் அறிமுக உரையாக 'ஒளிமயமான வீடு' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.

இதன் பின்னர் பி.எஃப்.ஐ ஆற்றிய சமூக சேவை தொடர்பான ஆவணப்படம் திரையிடப்பட்டன. மேலும் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பி.எஃப்.ஐ திருச்சி மாவட்ட நிர்வாகி நியமத்துல்லாஹ் 'சுபச்செய்தி' என்ற தலைப்பில் உரையாற்றினார்.

முன்னதாக பி.எஃப்.ஐ  பட்டுக்கோட்டை டிவிசன் பிரசிடெண்ட் வழக்கறிஞர் நிஜாம் வரவேற்புரை ஆற்றினார். நிகழ்ச்சி முடிவில் பி.எஃப்.ஐ அதிரை யூனிட் பிரசிடெண்ட் ரிழா நன்றி கூறினார்.

நிகழ்ச்சியில் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பான 50 கேள்வி - பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நிகழ்ச்சியில் 150 க்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்ற 10 பேர்களுக்கு விழா மேடையில் பரிசுகள் வழங்கப்பட்டது. ஆண்களுக்கு தனியிட வசதி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.