இதில் கடந்த 33 ஆண்டுகளுக்கும் மேலாக அதிரை காதிர் முகைதீன் கல்லூரியில் பல்வேறு பொறுப்புகளில் சிறப்பாக பணியாற்றி ஒய்வு பெற உள்ள கல்லூரி முதல்வர் முனைவர் ஏ. ஜலால் அவர்களின் சிறப்பான பணியை பாராட்டி பொற்க்கிழி மற்றும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது.
அதே போல் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக வேதியியல் துறையின் பேராசிரியராக பணியாற்றி ஒய்வு பெற உள்ள முனைவர் அக்பர் உசேன் அவர்களின் சிறப்பான பணியை பாராட்டி பொற்க்கிழி மற்றும் பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டது. இவற்றை எம்.கே.என் ட்ரஸ்ட் நிர்வாகி நீதிபதி கே. சம்பத் வழங்கினார்.
பழக இனிமை! பார்க்க எளிமை ! முதல்வர் ஜலால் சார் அவர்களைப் பிரிவதை நினைக்க கஷ்டமாக இருக்கிறது. அவர்களுக்கு இறைவன் நல்ல சுகத்தையும் தனது அருளையும் வழங்குவானாக!
ReplyDeleteஅதே போல் அக்பர் உசேன் சார் அவர்களிடம் பழகும் வாய்ப்பு இல்லாவிட்டாலும் கேள்விப்பட்டு இருக்கிறோம். அவர்களுடைய நல வாழ்வுக்காகவும் துஆச் செய்கிறோம்.